×

பாஜகவில் இணைந்த விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் !

திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கி விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் என்று பெயர் வாங்கிய பேரரசு பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.

 

திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கி விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் என்று பெயர் வாங்கிய பேரரசு பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.

பாஜக வரிசையாக திரை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை தங்கள் கட்சிக்குள் இழுத்துப் போட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரம் பேட்மிண்ட்டன் வீரர் சாய்னா நெஹ்வால் பாஜகவில் இணைந்தார். இதுபோல தமிழ் நாட்டிலும் வரிசையாக திரை பிரபலங்களான கங்கை அமரன், கௌதமி, ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தனர். நயன்தாரவுக்கு கூட பாஜகவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த பேரரசு பாஜகவில் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இணைந்துள்ளார். இவர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என்ற இரு ஹிட் படங்களையும் திருப்பதி என்ற அஜித்தை வைத்து ஒரு படத்தையும் இயக்கியவர். சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News