Categories: Cinema News latest news

விக்ரம் இசை வெளியீடு : பேரதிர்ச்சியூட்டும் செய்தி வெளியானது.! அந்த விஷயம் நிச்சயம் நடக்காதாம்.!

தமிழ் திரையுலகம் தற்போது உற்றுநோக்கி வரும் ஓர் பிரம்மாண்ட நிகழ்ச்சி என்றால் அது விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான். உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் என நடிப்பு ஜாம்பவான்கள் ஒரே திரைப்படத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

மேலும், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பது இப்படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இத்திரைப்படம் ஜூன் 3ஆம்  தேதி திரைக்கு வர உள்ளது. இன்று இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இதற்காக காலை முதலே ரசிகர்கள் அனுமதி சீட்டு வாங்கி எப்போது அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அங்கு காத்திருக்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையத்தில் எப்படியும் நேரடி ஒளிபரப்பு இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியூட்டும் சம்பவம் ஆக ஓர் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியின் யூடியூபில் எந்த சேனலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட மாட்டாதாம்.

இந்த இசை வெளியீட்டின் தொலைக்காட்சி வெளியீட்டு உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து, இம்மாதம் வரும் 22ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்ப நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – வயசானாலும் சிங்கம் தான்.! தளபதியின் பிரமாண்ட சாதனையை 3 நாளில் காலி செய்த ஆண்டவர் கமல்.!

இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. நேரடி ஒளிபரப்பு செய்தால் மட்டுமே தங்களது ஆஸ்தான நடிகர்கள் என்னென்ன பேசுவார்கள் என்பது நேரடியாக தெரியும். இவர்கள் தொகுத்து தங்களுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் ஒளிபரப்புவார்கள் என்று வேதனை தெரிவித்து வருகின்றனர் இணையவாசிகள்.

Manikandan
Published by
Manikandan