நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், ரம்மி , சீதக்காதி , சூப்பர் டீலக்ஸ் என பெரும்பாலும் விஜய்சேதுபதி திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக வலம் வந்தவர் நடிகை காயத்ரி. நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் ஒரு சில படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் காயத்ரி.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் காயத்ரி நடித்திருப்பார். அதாவது காவல் துறைக்கு உதவி செய்யும் அதிகாரியாக நடித்திருக்கும் பகத் பாசில் அவர்களுக்கு மனைவியாக நடித்திருப்பார்.
ஆனால் ஒரு கட்டத்தில் வில்லன் குரூப் காயத்ரியை கொலை செய்துவிடும். இதனை கவனித்த இணையவாசிகள் பேஸ்புக் பக்கத்தில் ஓர் பதிவை இட்டுள்ளனர்.
இதையும் படியுங்களேன் – சூரியை கைகழுவிய சூர்யா பட சூப்பர் ஹிட் இயக்குனர்.! மகனின் பாச போராட்டத்தை இப்படி செஞ்சிட்டிங்களே.?
அதாவது, ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எனும் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு அனைத்தும் மறந்து விடும் அதில் காயத்ரி தான் மனைவியாக இருப்பார். அதேபோல சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக காயத்ரி இருப்பார். ஆனால் விஜய் சேதுபதி திருநங்கையாக மாறி விடுவார்.
அதே போல் விக்ரம் திரைப்படத்தின் பகத் பாசில் மனைவியாக வரும் காயத்ரி, ஃபகத் பாசில் யார் என்றே தெரியாமல் உயிர் இழந்து விடுவார். இதனை குறிப்பிட்டு இருந்தனர்.
இதனை பார்த்த காயத்ரி ,ஆம் உண்மையில் எனக்கும் எனது கணவர் கதாபாத்திரங்களுக்கும் ராசி இல்லை’ என்று பதிவிட்டு ரசிகர்களின் அந்த மீம்ஸ்-ஐ என்ஜாய் செய்து இருந்தார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…