சூரியை கைகழுவிய சூர்யா பட சூப்பர் ஹிட் இயக்குனர்.! மகனின் பாச போராட்டத்தை இப்படி செஞ்சிட்டிங்களே.?

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக போராடி தற்போது நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ள நபர்களின் முக்கியமானவர் நடிகர் சூரி. நீண்ட வருடமாக துணை நடிகனாக இருந்து தற்போது காமெடியனாக, வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக வளர்ந்துள்ளார் நடிகர் சூரி.

இவருக்கு ஓர் ஆசை வந்துள்ளது. அதாவது இவரை வளர்த்து ஆளாக்கியுள்ள இவரது தந்தையின் வாழ்வை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று. அதற்கான வேளைகளில் சூரி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

soori_main_cine

அதில் சூரி முதலில் சந்தித்தது இயக்குனர் பாண்டிராஜ் அவர்களை. சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாண்டிராஜிடம் இந்த கதையை கூறியதும், இல்லை, சூரி எனக்கு அடுத்தடுத்து பெரிய பட வேலைகள் இருக்கிறது என கூறி நழுவிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் - தனது அப்பாவை பயங்கரமாய் பழிவாங்கிய லோகேஷ் கனகராஜ்.! அவருக்கு இப்படி ஒருஃபிளாஸ் பேக்கா?...

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் சூரி காமெடியையும், படத்தின் கதையையும் சிறப்பாக வடிவமைத்து இருப்பார் பாண்டிராஜ். இருந்தும் இயக்குனர் பாண்டிராஜால் சூரி கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாம்.

தற்போது, சூரி கோரிக்கையை இயக்குனர் ராம் நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளாராம். அதன் படி, சூரி தந்தை வாழ்க்கை வரலாற்று கதையை ராம் இயக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

 

Related Articles

Next Story