Categories: Cinema News latest news throwback stories

விஜய் நடிக்க இருந்த ஃபேன் இந்தியா படம்… விக்ரமால் பறிபோன சோகம்… சீயானா இப்டி?

Vijay: தமிழ் சினிமாவில் சரித்திர படங்கள் வருவதே அவ்வப்போது தான். அதில் நடிகர்கள் தேர்வு கொஞ்சம் வித்தியாசமானதாக தான் இருக்கும். அதுவரை பெரிய ஹிட் கொடுக்காத பிரபலங்களும், மிகப்பெரிய உச்சங்களை தொட்ட பிரபலங்களும் என கலவையே வித்தியாசமானதாக இருக்கும். 

அப்படி ஒரு படமாக சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் இரண்டு பாகமாக வெளிவந்தது. பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக த்ரிஷா, வந்தியதேவனாக கார்த்தி, பழுவேட்டையர்களாக பார்த்திபன், சரத்குமார் என கோலிவுட்டே அந்த படத்தில் களமிறங்கி இருந்தனர்.

இதையும் படிங்க : ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்து!.. இளசுகளை இம்சை பண்ணும் தனுஷ் பட நடிகை….

கோலிவுட்டில் இந்த படத்தினை எல்லா தலைமுறை நட்சத்திரங்கள் இயக்க வேண்டும் என போராடினாலும், அதை செய்தவர் என்னவோ மணிரத்னம் தான். ஆனால் இதே மணிரத்னம் கூட 2011லேயே இந்த படத்தினை இயக்க முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் அதில் வந்தியதேவனாக விஜயும், பொன்னியின் செல்வனாக மகேஷ் பாபுவும், பழுவேட்டையராக சத்யராஜும், நந்தினியாக அனுஷ்காவும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடிக்க இருந்தனர். அதற்கான போட்டோஷூட்டும் முடிந்தது. கிட்டத்தட்ட எல்லா கேரக்டரும் முடிவாகியும் விட்டது.

இதையும் படிங்க: யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன கதையா போச்சா… தர்பார் ப்ளாப்புக்கு காரணம் இதுதானா?

இந்த நேரத்தில் தான் விக்ரம் கரிகாலன் என்ற இன்னொரு படத்தில் புக்காகி இருக்கிறார். அந்த படம் வந்தால் பொன்னியின் செல்வனின் புகழ் குறையும் என நினைத்து இருக்கிறார். அதனால் ஆதித்த கரிகாலனாக ஆர்யாவை கேட்டு சென்றுவிட்டார்.

கடைசியில் நடந்த குளறுபடிகளால் விக்ரமின் கரிகாலனும் வரவில்லை. அந்த நேரத்தில் நடக்க இருந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் வரவில்லை. கிடப்பில் இருந்த கதையை இந்த காலத்துக்கு இரண்டு பாகங்களாக மாற்றியே சமீபத்தில் மணிரதனம் பொன்னியின் செல்வனை ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily