×

முதன்முறையாக மகளுடன் விராட் கோலி, அனுஷ்கா  - சூப்பர் கியூட் ஃ பேமிலி பிக்!
 

 மகளுடன் விராட் கோலி , அனுஷ்கா சர்மா வெளியிட்ட முதல் புகைப்படம்!
 
 

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. மாடல்கள், அழகிகள் என பலரும் முயன்றும் சிக்காமல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா இந்த கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணியானார். 2021 ஜனவரி மாதம் குழந்தை பிறக்கவுள்ளது என விராட் கோலி முன்னரே தெரிவித்திருந்தார். மேலும், ஜனவரியில் நாங்கள் 3 பேர் என பதிவிட்டு மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருந்தார்.

இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா குழந்தைக்கு ஆரோக்கயமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வந்தார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கினார். கடந்த மாதம் 11ம் தேதி  விராட்கோலி அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தைக்கு வமிகா என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா தனது முகநூல் பக்கத்தில் கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட கியூட்டான பேமிலி போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

மேலும், அந்த பதிவில் "நாங்கள் ஒரு வாழ்க்கை முறையாக அன்பு, இருப்பு என நன்றியுடன் ஒன்றாக வாழ்ந்தோம்.  ஆனால், இந்த சிறிய வாமிகா அதையெல்லாம் ஒரு புதிய லெவலுக்கு கொண்டு சென்றாள். கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம் என சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள் நிறைய உள்ளது. தூக்கம் மழுப்பலாக இருக்கிறது. ஆனால், இதயங்கள் நிரம்பியுள்ளது. உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News