Categories: Cinema News latest news

மீண்டும் விஜய் ரூட்டுக்கு தாவிய விஷால்.! வெளியான புது போஸ்டரால் குழப்பத்தில் ரசிகர்கள்.!

விஷால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தவித்து வருகிறது. அவர் கொடுத்த கடைசி காம்பேக் திரைப்படம் என்றால் நமக்கு தெரிந்து இருமுபத்திரை தான்.

இருந்தும் அவர் நடிப்பில் அடுத்தடுத்து தயாராகி வரும் லத்தி, மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்கள் கொஞ்சம் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. இதில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்களேன் – இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். விஷால் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை ஒட்டி, படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி தளபதி என எழுதியுள்ளது.

இதையும் படியுங்களேன் – இதுதான் சூப்பர் ஸ்டாரின் ராஜ தந்திரம்.! அந்த ஐடியாவை அப்படியே ஃபாலோ செய்யும் அஜித்.!

விஷால் ஒரு பேட்டியில் கூட சொல்லியுள்ளார் நான் விஜய் ரசிகன் தான் என்று. அதே போல விஜய் தளபதி விஜய் என தன் பெயருக்கு பின்னால் வைத்திருப்பது போல, புரட்சி தளபதி என ஆரம்பகால படங்களில் வைத்து இருந்தார். ஆனால், அதன் பின்னர் அதனை நீக்கிவிட்டார். தற்போது மீண்டும் புரட்சி தளபதி என வைத்து மீண்டும் தளபதி ரூட்டை பின்பற்ற தொடங்கியுள்ளார் விஷால்.

ஆனால் இதில் என்ன விஷயம் என்னவென்றால் டக்கென இந்த போஸ்டர் வந்ததும், கைதி பட கார்த்தி போலவே அப்படியே இருக்கிறார் என்ற கமெண்ட்களும் பறக்க தொடங்கிவிட்டனர்.

Manikandan
Published by
Manikandan