அஜித்தை பின் தொடர்ந்து அஜர்பைஜானுக்கு தனது படக்குழுவுடன் நடிகர் விஷால் இயக்குநர் விஷாலாக பறக்கப் போகிறாராம். 25 வருடங்களாக இயக்குநராக வேண்டும் என்பது தான் தனது கனவு என்றும் அதை விட்டு நடிகனாக மாறிவிட்டேன். ரசிகர்களின் அன்பு எனக்கு இத்தனை வருஷம் கிடைச்சிருக்கு. அதற்கெல்லாம் ரொம்பவே பொறுப்புடன் துப்பறிவாளன் 2 படத்தை அடுத்து இயக்கி வெளியிடப் போவது தான் லட்சியம் என விஷால் வீடியோ ஒன்றை பேசி தற்போது வெளியிட்டுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். அந்த படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இதையும் படிங்க: பட புரமோஷனுக்காகத்தான் எனக்கிருந்த நோயை வெளியே சொன்னேன்!.. பகீர் கிளப்பிய சமந்தா!..
ஆனால், திடீரென மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்த நிலையில், இருவரும் அசிங்க அசிங்கமாக திட்டிக் கொண்டு பஞ்சாயத்தை பெரிதாக்கினர். அதன் பின்னர் அந்த சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கப் போவதாக அறிவித்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மற்ற மற்ற படங்களில் நடித்து வந்தார். விஷால் நடித்து கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு முதல் 100 கோடி வசூல் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: துணை நடிகையுடன் தனி வீட்டில் ஜல்சா… திடீரென ஆசை கொண்ட உச்ச நட்சத்திரம்…
அடுத்து ரத்னம் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், டோக்கியோ, அஜர்பைஜான் மற்றும் மால்டா என வெளிநாடுகளிலேயே துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாகவும், மிஷ்கின் சாரின் ஆசியுடன் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…