Categories: Cinema News latest news

மனைவியை தான் டைவர்ஸ் பண்ணேன்!.. மகனை பிரியல!.. விஷ்ணு விஷால் வெளியிட்ட போட்டோஸ் பாருங்க!..

ஆடு பகை குட்டி உறவுன்னு சொல்லும் பழமொழி விஷ்ணு விஷால் விசயத்திலும் சரியாகத்தான் பொருந்தி போகிறது. முதல் மனைவியான ரஜினி நட்ராஜை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் விஷ்ணு விஷால்.

அதன் பின்னர் 2021ம் ஆண்டு விளையாட்டு வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துக் கொண்டார். ஆனாலும், தொடர்ந்து தனது மகன் ஆர்யான் உடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வரும் விஷ்ணு விஷால் நேற்று தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லியோ 2 எடுக்குற வரைக்கும் இப்படியே வெயிட் பண்ண வேண்டியதுதான் போல!.. மடோனா செபாஸ்டியன் நெக்ஸ்ட் என்ன?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

தனது இரண்டாவது மனைவியுடன் தனது மகன் ஆர்யான் உடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டுள்ள விஷ்ணு விஷாலை ரசிகர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: ப்ளாட்ட கட்டுங்க.. கோடியில் புரளுங்க! வாய்ப்பு இல்லைனாலும் வாடகை விட்டு சம்பாதிக்கும் பிரபலங்கள்

முதல் மனைவியுடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அந்த வேதனையில் இருந்து மீள முடியாமல் குடிக்கு அடிமையான விஷ்ணு விஷால் ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், சினிமாவில் இருந்து காணாமலே போய் விட்டார். ஆனால், மீண்டும் உடற்பயிற்சி செய்து குடிப் பழக்கத்தை விட்டு விட்டு 2வது திருமணம் செய்துக் கொண்ட விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி, லால் சலாம் என மீண்டும் சினிமாவில் சின்சியராக நடித்து வெற்றியை ருசித்து வருகிறார்.

Saranya M
Published by
Saranya M