லியோ 2 எடுக்குற வரைக்கும் இப்படியே வெயிட் பண்ண வேண்டியதுதான் போல!.. மடோனா செபாஸ்டியன் நெக்ஸ்ட் என்ன?

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களின் ஃபேவரைட் கிரஷ்ஷாக மாறியவர் நடிகை மடோனா செபாஸ்டியன். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தன்னை ரொம்பவே புடிச்சு போச்சு என நினைத்து தெரியாத்தனமாக கோலிவுட்டில் வந்து சிக்கிக் கொண்டார்.

விஜய்சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான காதலும் கடந்து போகும் படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதியுடன் கவண், ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க: ப்ளாட்ட கட்டுங்க.. கோடியில் புரளுங்க! வாய்ப்பு இல்லைனாலும் வாடகை விட்டு சம்பாதிக்கும் பிரபலங்கள்

தனுஷ் உடன் ப. பாண்டி படத்தில் ரேவதியின் சின்ன வயது கேரக்டரில் நடித்தார். வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா என நடிக்க ஆரம்பித்த மடோனா செபாஸ்டியனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போன நிலையில், கடைசியாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் தளபதியின் தங்கையாக “நா ரெடி தான்” பாட்டுக்கு நடனமாடி அடுத்த சீனே பலியாகி விட்டார்.

லியோ படத்திற்கு பிறகாவது மடோனா செபாஸ்டியனுக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தவருக்கு இன்னமும் அடுத்த படமே கிடைக்கவில்லையாம். லியோ 2 வெளியானால் தான் உண்டா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நம்ம ஊர்ல எப்போ ரிலீஸ் பண்றீங்க!.. விருது விழாவில் தயாரிப்பாளரிடம் போட்டு வாங்கிய ராம்!..

மீண்டும் பழையபடி மாடி போட்டோஷூட் நடத்தி பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்து விட்டார் மடோனா செபாஸ்டியன் என்கின்றனர். லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள சேலை கட்டிய புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

Related Articles

Next Story