×

விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - ரசிகர்கள் அஞ்சலி

 
விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது - ரசிகர்கள் அஞ்சலி

சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மாலை 4 மணியளவில் அவரின் இறுதிச்சடங்கு துவங்கியது. விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்  இருந்து அவரது உடல் மேட்டுக்குப்பம் மின் மாயனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. மேட்டுக்குப்பம் மயானம் சென்றவுடன் 78 குண்டுகள் முழங்க அவரின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின் விவேக்கின் மகள் அவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். அதன்பின் விவேக்கின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News