Categories: Cinema News latest news

ரஜினி படத்துல நடிக்க ஹீரோ வாய்ப்பையே விட்டுட்டு வந்த விஜய் டிவி பிரபலம்!.. அட யாருன்னு பாருங்க!..

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் விஜே ரக்‌ஷன். துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனன் நடித்து வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானின் நண்பராகவும் இரண்டாவது ஹீரோவாகவுமே ரக்‌ஷன் நடித்திருப்பார்.

அடுத்து 2 படங்களில் ஹீரோவாக நடிக்க அட்வான்ஸ் வரை கொடுக்கப்பட்ட நிலையில், அந்த அட்வான்ஸ் பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டு ரஜினிகாந்த் சார் படத்தில் நடிக்க ஓடோடி வந்து விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரக்‌ஷன் வெளிப்படையாக பேசியிருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது.

இதையும் படிங்க: உலகநாயகனோ நவரச நாயகனோ… ஆளவிடுங்கடானு கும்பிடு போட்ட பிரபல நடிகை… ஏன்னு தெரியுமா?…

ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் தான் ரக்‌ஷன் நடித்து வருகிறார். விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரக்‌ஷனுக்கு ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் வட்டம் என ஏகப்பட்ட பேர் இருக்கும் நிலையில், தற்போது இந்த பேட்டிக்கு பிறகு ரஜினிகாந்த் ரசிகர்களும் இவருக்கு ஃபாலோயர்கள் ஆகி விடுவார் என்றே தெரிகிறது.

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் என பலர் நடித்து வரும் நிலையில், ஒரே படத்தில் பெரிய காஸ்டிங்குடன் நடிக்கும் வாய்ப்பும் ரக்‌ஷனுக்கு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: டோலிவுட்டிலும் மோதப் போகும் சிவகார்த்திகேயன், தனுஷ்.. அங்கே யாரு கல்லா கட்டி ஜெயிக்கப்போறா?..

Saranya M
Published by
Saranya M