என்னோட பிளஸ் பாயிண்டே என் உருவ அழகுதான்!.. வாட்டர்மெலான் திவாகர் இன்னும் திருந்தல மாமா!..
சமீபத்தில் ப்ரோவோக் யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்த போது மீண்டும் சர்ச்சையை கிளப்ப கேமராவை உடைக்கச் சென்ற நிலையில், அந்த யூடியூப் சேனலுக்கும் அவருக்கும் சண்டை வெடித்தது. ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சென்று மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் தன்னை குடித்துவிட்டு அடித்து உதைத்தனர் என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுபவர்களை எல்லாம் விஜய் டிவி பிக் பாஸ் பிரபலங்களாக மாற்றி வருவதன் விளைவு முன்பு மீரா மிதுன், இப்போ வாட்டர்மெலான் திவாகர் என ரசிகர்கள் விஜய் டிவியை குறை கூறி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு நல்ல நாள் அதுவுமாக ஸ்டேஷனில் வந்து நிக்க வேண்டும் என தலையில் எழுதியிருக்கு அதனால் தான் வந்து நிற்கிறேன் என்றும் பெண்களிடம் ரொம்ப தவறாக நடந்துக் கொண்டார். திருமணமான நடிகையை அவரது கணவர் முன்பே தோள் மீது கை போட்டு, இன்னைக்கு ஒரு நாள் என்கூட வரியான்னு சொல்லிட்டு இதான் காமெடி என்கிறான் அந்த கருமம் புடிச்சவன் என மாகாபா ஆனந்த் கோபத்தை கொட்டினார்.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்த வாட்டர்மெலான் திவாகர் தனது பிளஸ் பாயிண்ட்டே தனது உருவ அழகு தான் என்றும் கல்லூரி படிக்கும் போதே, கோடீஸ்வர சேர்மேன்கள் எல்லாம் தன்னை வந்து பார்த்து இவன் ரொம்ப அழகா இருக்கான், இவன் முகத்துல ஏதோ இருக்கு, பெரிய ஆளா வருவான்னு சொல்றாங்க, நான் ரொம்ப பெரிய ஆள் என்பதால் என்மீது பொறாமைப்பட்டுக் கொண்டு எனக்கு எதிரான சதி செய்யுறாங்க என வாட்டர்மெலான் பேசிய வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
