×

இனி வனிதா பத்தி நியூஸ் போடமாட்டோம் –பின்வாங்கிய இணையதளம்

வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில் அதுபற்றி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன இணையதள ஊடகங்கள்.

 

வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில் அதுபற்றி தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தன இணையதள ஊடகங்கள்.

நடிகை வனிதா மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் பீட்டரின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் நான் இன்னும் என் கணவரை விவாகரத்து செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி வனிதா அவரை திருமணம் செய்யலாம் எனக் கேள்விகளை எழுப்பினார். இதை வைத்து ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து போல பிரபலங்களை வைத்து நியூஸ்களை வெளியிட்டு வந்தனர். அதில் சொல்வதெல்லாம் புகழ் லஷ்மி ராமகிருஷ்ணன் தோன்றி பேசிய வீடியோ வைரலாகவே, வனிதா அவர் மேல் உச்சகட்ட கோபத்தில் இருந்தார்.

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் வனிதா மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணனை லைவ்வில் உரையாட வைத்தது. அதில் விஸ்வரூபம் எடுத்த வனிதா ல.ராவை கிழி கிழி யென்று கிழித்தார். மேலும் சம்மந்தப்பட்ட சேனலையும் பல கேள்விகள் கேட்டு திணறடித்தார். இதனால் சமூகவலைதளங்களில் அந்த சேனலையும் ல. ராவையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இதையடுத்து அந்த இணையதளம் இனி வனிதா பற்றி நாங்கள் எந்த செய்தி மற்றும் வீடியோவையும் வெளியிடமாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News