Categories: Bigg Boss latest news television

நிக்ஸன் கமெண்ட்டை கண்டுக்காமல் விட்ட கமல்ஹாசன்… இதுவே தெலுங்கில் நடந்த போது என்ன ஆனது தெரியுமா?

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸில் இந்த வார இறுதி அனைத்து ரசிகர்களுக்குமே புஸ்ஸென ஆகிவிட்டதாக கமெண்ட் தட்டி வருகின்றனர். அதிலும் சக பெண் போட்டியாளர் வினுஷா குறித்து அவர் அடித்த கமெண்ட்டை கண்டுக்காமல் கடந்து சென்றுவிட்டாரே என பலரும் கடுப்பாகினர்.

இந்த சீசன் பிக்பாஸ் தொடங்கியதில் இருந்து நிறைய துஷ்பிரயேகமான வசனங்களே அதிகம் இடம்பெற்றது. அதிலும் சக பெண் போட்டியாளர் வினுஷா தேவியின் உடலை மட்டமாக கலாய்த்தார் நிக்ஸன். இது அப்போதே பேசுபொருளாகி சர்ச்சையானது.

இதையும் படிங்க: சிவாஜி படத்தால் பிரிந்த ஜெமினி கணேசன்- சாவித்ரி… காதல் மன்னன் இப்படிப்பட்டவரா?…

கடந்த வாரம் நடந்த ஸ்டேட்மெண்ட் டாஸ்கில் இந்த டயலாக் சக போட்டியாளர்கள் முன் காட்டப்பட்டது. அதற்கு நிக்ஸன் இது சாதாரணமாக சொல்லப்பட்டது தான் சப்பை கட்டு கட்டினார். இருந்தும் தினேஷ், விசித்ரா இருவரும் குரல் எழுப்பினர். மற்ற போட்டியாளர்கள் இது குறித்து எதுவுமே கேட்கவில்லை.

இதையும் படிங்க: விஜய்க்காக இத செஞ்ச நீங்க..! அத ஏன் மிஸ் பண்ணீங்க..! எஸ்.ஏ.சந்திரசேகரை சீண்டிய பத்திரிக்கையாளர்..

அதிலும் பூர்ணிமா தான் அழகாக இருக்கிறார் என அவர் சொல்லியதற்கு பூர்ணிமா தேங்க்ஸ் சொன்னதெல்லாம் ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்டது. இதை கமல் பேச வேண்டும். அப்போது நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்படும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த வார இறுதியில் கமல் அதை சாதாரணமாக கடந்து சென்று விட்டார். அதற்கு வினுஷா தன்னுடைய இன்ஸ்டா மூலம் மன வருத்தம் தெரிவித்து நிக்ஸனுக்கு கண்டனத்தினையும் பதிவு செய்தார். இந்நிலையில் இதே மாதிரி பெண் போட்டியாளர்களின் அங்கத்தினை கமெண்ட் செய்த தெலுங்கு போட்டியாளர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தெலுங்கு பிக்பாஸை நாகர்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். அப்படி பெண்ணை பேசியவரை சரமாரியாக திட்டி தீர்ப்பதாக அந்த வீடியோ அமைந்து இருக்கிறது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் கமலை அவரிடம் கற்றுக்கொள்ளுமாறு தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.

Published by
Shamily