×

விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை! - மருத்துவனையில் நடப்பது என்ன?...

 
விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை! - மருத்துவனையில் நடப்பது என்ன?...

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக். ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர். ஏனெனில், நகைச்சுவை மட்டுமின்றி சமூக அவலங்களை தனது நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நேற்று அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

vivek

தற்போது அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.  இன்று காலை வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென விவேக் மயக்கமடைந்தார். எனவே, காலை 11 மணியளவில் அவரின் குடும்பத்தினர் அவரை சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதித்தனர்.  அவரது இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக அவரது உதவியாளர் செல் முருகன் மற்றும் பிஆர்ஒ நிகில் முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. சுய நினைவுடன் உள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News