×

என்னது விக்ரம் தாத்தா ஆகப்போறாரா ? நம்ப முடியவில்லையே!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் இப்போது தாத்தா ஆகப்போகிறார் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் இப்போது தாத்தா ஆகப்போகிறார் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் இளமையாகவும், உடலைக் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இப்போது 54 வயதைக் கடந்தாலும் இன்னமும் 40 வயதுக்காரர் போலவே தோற்றத்தில் இருப்பவர். இந்த நிலையில் தற்போது விக்ரம் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரமின் மகளாக அக்ஷிதாவுக்கும், கலைஞரின் தூரத்து உறவினர் மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அக்‌ஷிதா இப்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைக் கேட்டு விக்ரம் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News