×

என்னது சாந்தனு மேமா ? சமூகவலைதளங்களில் கேலி செய்யப்பட்ட ’96’ கௌரி !

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌரி கிஷனை சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கௌரி கிஷனை சமூக வலைதளங்களில் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள  ‘மாஸ்டர்திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள கௌரி கிஷன் மேடையில் பேசிய போது சாந்தனுவைப் பற்றி குறிப்பிடும் போது சாந்தனு மேம் எனத் தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டார்.

இதை உணர்ந்து மேடையிலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டும் சாந்தனு சார் எனக் கூறினார். ஆனாலும் சமூக வலைதளங்களில் அவரைப் பலரும் கேலி செய்ய தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அண்ணா என்று கூறுவதற்குப் பதில் மேம் என்று கூறிவிட்டேன். மன்னித்து விடுங்கள் அண்ணா’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News