×

விலகினா நஷ்ட ஈடு தரணும்.. என்ன முடிவெடுப்பார் விஜய் சேதுபதி?...

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். 

ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்திம் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில், இப்படத்திற்கு விஜய்சேதுபதி ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.5 கோடியை முன்பணமாக அவர் பெற்றுள்ளாராம். தற்போது அவர் படத்திலிருந்து விலகுகிறேன் என அறிவித்தால், பட தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பணம் ரூ.5 கோடி இல்லாமல் மேலும் சில கோடிகளை முன்பணமாக கேட்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

எனவே, விஜய் சேதுபதி என்ன முடிவெடுப்பார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News