×

வேர்க்கடலைக்குள் என்ன? அதிர்ச்சியான அதிகாரிகள் – நூதனமாக கடத்தல் செய்த நபர்!

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதித்த போது அதில் வெளிநாட்டு டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதித்த போது அதில் வெளிநாட்டு டாலர்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் இருக்கும் இந்திராகாந்தி விமான நிலையத்தில் அவ்வப்போது சோதனையில் முறைகேடாக கொண்டு வரப்படும் பொருட்கள் சிக்குவது இயல்பு. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அதுபோல சோதனையில் ஈடுபட்டபோது ஒரு நபர் தனது பை முழுவதும் உணவுப் பொருட்களை வைத்திருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் உள்ள பொருட்களை சோதனை செய்த போது, வேர்க்கடலைக்குள் வெளிநாட்டு டாலர்கள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல அவர் வைத்திருந்த பிஸ்கட் மற்றும் இன்ன பிற பொருட்களிலும் இதுபோல டாலர் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News