×

இது எப்போ நடந்துச்சு...? இணையத்தில் லீக்கான சிம்பு - சமந்தாவின் Unseen போட்டோ!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2016 ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு பதிலாக முதலில் ஒப்பந்தமானது நடிகை சமந்தா தானாம். அந்த படத்திற்காக சமந்தா மற்றும் சிம்புவை வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இது. பின்னர் அந்த படத்தின் பணிகள் தாமதமாக நடைபெற்றதால் அதிலிருந்து விலகிவிட்டாராம் சமந்தா.

 

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.  இந்த படம் சமந்தாவின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

இதே போல் விண்ணை தாண்டி வருவாயா படமும் சிம்புவின் இரண்டாவது இன்னிங்சிற்கு பெரிய மைல் கல்லாக இருந்தது. இதன் தெலுங்கு ரீமேக் சமந்தா திருமண வாழ்க்கைக்கு பெரிய உதவியாக அமைந்தது.  நாக சைதன்யாவுடனான 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சமந்தா - சிம்புவின் நெருக்கமான இந்த ரொமான்டிக் போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News