Categories: Cinema News latest news

கோலிவுட்டில் நம்பர் ஓன்…சம்பளமே இத்தனை கோடி… யார் அந்த நடிகை…காலியான லேடி சூப்பர்ஸ்டார்…

Actress: தமிழ் சினிமாவின் வருமானம் அதிகரித்து இருக்கும் நிலையில் நடிகர்களை தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்த தகவல் கசிந்துள்ளது. இதில் நடிகை நயன்தாரா போட்டியில் ஒதுங்கி இருக்கும் சம்பவமும் நடந்து இருக்கிறது.

கோலிவுட்டின்  திரைப்பட வருமானம் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த வருடம் மட்டும் தமிழ் சினிமாவுக்கு 3500 கோடி வருமானமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்த வருடம் ரஜினி, கமல், விஜய், அஜித்  உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வர தயாராகி வருகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

இதனால் 2024-ன் பாதியில் நிறைய பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அவர்களின் சம்பளங்களும் பல கோடிகள் அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்திற்கு 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

இது அவரின் கடைசி படமாக இருந்தால் அவருக்கு அடுத்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர்களுக்கு போட்டியாக நடிகைகளின் சம்பளங்களும் தற்போது கோடிகளில் அதிகரித்து வருகிறது. அதன்படி நடிகை திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை சரியாக கையாண்டு வருகிறார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி பிரபலத்தினை காதலிக்கும் அம்மு அபிராமி… அதானே பாத்தோம்…

இதைத் தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக திரிஷா மாறி இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அந்தஸ்தில் இருந்த நயன்தாரா சமீபத்திய காலமாக வெளிவந்த எல்லா படங்களும் தோல்வியை தழுவிய நிலையில் அவரின் மார்க்கெட் பெருமளவில் சரிந்துள்ளது.

Published by
Shamily