Categories: Cinema News latest news

ஏன்டி நான் படம் பண்றப்போ நீ இல்லாம போய்ட்ட..?! சர்ச்சை நாயகியை பார்த்து பொறாமைப்பட்ட பாரதிராஜா.!

சமீப காலமாக பல சீரியல் நடிகைகள் சர்ச்சையாக பேசி பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில், பெண்கள் தினத்தன்று ஒரு மேடையில் ஆண்களை பற்றி கொச்சையாக பேசி சர்ச்சயை ஏற்படுத்தியவர் சீரியல் நடிகை ரேகா நாயர். இவர் சில சீரியல்களில் மட்டுமே நடித்திருந்தால் சிலருக்கு இவர் யார் என்றே தெரியாமல் இருக்கும்.

இவருக்கு தனது இரவின் நிழல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு பார்த்திபன் அறிமுகப்படுத்திவிட்டார். இரவின் நிழல் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் மார்பகம் தெரியும் அளவுக்கு ஒரு காட்சியில் நடித்து இருந்தார். அந்த காட்சி சர்ச்சையாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனால், பல ஊடகங்கள் ரேகா நாயரை பேட்டி கொடுப்பதற்காக அழைத்து வருகிறார்கள். அவரும் பல ஊடகத்திற்கு சர்ச்சை அளிக்கும் விதமாகவும் பேசி வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பாரதி ராஜா குறித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- சூர்யா மீது கடுங்கோபத்தில் தமிழ் நடிகைகள்.. எங்கள பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது.?!

இது தொடர்பாக பேசிய அவர் “பாரதி ராஜா சார் என்னிடம் அடிக்கடி பேசுவார். அப்போது பேசும் போது என்னிடம் ஏன்டி நான் படம் பண்றப்போ நீ இல்லாம போய்ட்ட..? என்ன பார்க்க வரவில்லை..? நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல்-டி என்று சொல்வார். ஆனால், எனக்கு இப்போ நல்லா தெரியும் நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்று.

அதாவது நான் சொல்லுறது இந்த காலகட்டத்துக்கு நான் இல்ல… பாலு மகேந்திரா சார், பலசந்தர் சார், பாரதி ராஜா சார் படம் எடுக்கும் காலத்தில் எனக்கு 20 வயது. அப்போது நான் சினிமாவுக்கு நடிக்க வந்திருந்தால் நான் ஹீரோயின் மெட்டீரியல். நான் ஆபாசமாக படம் பண்ண போறது இல்ல. ப்ளூ பிலிம் பண்ண போறது இல்ல” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உண்மை..உண்மை என தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan
Published by
Manikandan