Categories: Cinema News latest news

தலைவரே போன் ஒயர் பிஞ்சு 2 வாரம் ஆகுது!.. உலகத்துலயே ஹீரோவே இல்லாம நடந்த சக்சஸ் மீட்.. அதான் விஷயமா?

பிப்ரவரி 9ம் தேதி வெளியான லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து பல தியேட்டர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் ஒரு பக்கம் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்துக்கு எந்தவொரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மானிடம் பிட்டு போட வேண்டும் என்பதற்காக பெயருக்கு ஒரு சக்சஸ் மீட்டை நடத்தியிருக்கின்றனர் என சினிமா வட்டாரத்தில் கேலியாக பேசி வருகின்றனர்.

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் உடன் படக்குழுவினர் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு படத்தோட 2 ஹீரோக்கள் எங்கேப்பா என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இதையும் படிங்க: 2 மணி நேர பேட்டிக்கு 13 லட்சம் வாங்கிய ’ஆண்ட்டி’ நடிகை… துட்டுக்காக இப்படியா இறங்குவீங்க..

விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் இடையே சண்டை வெடித்ததாக சமீபத்தில் தகவல்கள் கசிந்த நிலையில், ஒருவேளை அது உண்மையா இருக்குமோ? என்றும் விக்ராந்துக்கு கூட இந்த படம் ஏமாற்றத்தை கொடுத்து விட்டதா? அவரும் வரலையே என கேள்விகளையும் எழுப்பி உள்ளது.

உலகத்துலயே கேமியோ ரோலில் நடித்தவரை வைத்து பட புரமோஷன் முதல் சக்சஸ் மீட் வரை கொண்டாடிய ஒரே நபர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் தான் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கவுதம் மேனனுக்கு இதாவது ஹிட் அடிக்குமா!.. ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ டிரெய்லர் வீடியோ!..

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் சந்தித்துக் கொண்ட நிலையில், மீண்டும் இருவரும் சீக்கிரமே ஒரு படத்தில் இணைவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ரஜினிகாந்த் தனது படங்களுக்கு அனிருத்தை புக் செய்து வரும் நிலையில், இந்த சந்திப்பும் கவனம் பெறுகிறது.

Saranya M
Published by
Saranya M