Actress: தமிழ் நடிகைகள் மார்க்கெட் இறங்கினால் குடும்பத்துடன் செட்டில் ஆவது ஒரு காலம். ஆனால் இப்போது மார்க்கெட் விழுந்த நடிகைகள் மீண்டும் எப்படி சம்பாரிப்பது என்பதை யோசித்து அதற்கேற்ப காய் நகர்த்துவது வழக்கமாகி இருக்கிறது. அந்த வகையில் நடிகை மீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.
நடிகை மீனா ஒரு புதிய கதை திரைப்படத்தில் நடிகர் பிரபுராஜ்க்கு ஜோடியாக கோலிவுட் என்ட்ரி ஆனார். படத்தை தொடர்ந்து கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் ராஜ்கிரணுடன் இணைந்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் ஆக மீனாவின் நாயகி வாய்ப்பும் பிரகாசமானது.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் படத்தில் தமிழ் ஹீரோ இல்லையா? அக்கட தேசத்தில் இருந்து தூக்கப்பட்ட சூப்பர்ஸ்டார்..!
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் விஜயுடன் ஒரே பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடி இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னரும் மீனா கோலிவுட்டில் நடித்துக் கொண்டு வந்தார். ஆனால் ஹீரோயின் கேரக்டர் போய் அக்கா ரோலுக்கு தள்ளப்பட்டார். நரேன் நடிப்பில் வெளியான தம்பிக்கோட்டை படத்தில் அவரின் அக்காவாக முக்கிய வேடம் ஏற்றிருந்தார். படம் சுமாரகம் தான் என்றாலும் அம்மணி தன்னுடைய பாப்புலாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள மட்டுமே அந்த படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி
இந்நிலையில் மீனா குறித்து சில அதிர்ச்சியான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய தெரிவித்துள்ளார். அதிலிருந்து, மீனா சமீபத்தில் தன்னுடைய ஒரு பேட்டிக்காக ரூபாய் 13 லட்சம் வாங்கி இருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அந்த பேட்டி வெறும் 2 மணி நேரம் தான் என்பது இதில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
மேலும் மீனா 40 என்று தன்னுடைய பிறந்தநாளை சக நடிகை நடிகரை அழைத்து கோலாகலமாக கொண்டாடினார் மீனா. அதற்கும் ஒரு பெரிய தொகையை பார்த்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். டெலிவிஷன் ரைட்ஸ் கொடுத்து அதில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் தான் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியதாகவும் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.