டாக்ஸிக் விமர்சனம்.. டார்ச்சர் பண்ணி தலைவலி வந்தது தான் மிச்சம்.. யஷ் மீது கீதுவுக்கு என்ன காண்டோ?..
இந்த ஆண்டு ஏற்கனவே சுதா கொங்கரா சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலாவை வைத்து பராசக்தி என்கிற சம்பவத்தை செய்தாரோ, அதை விட மோசமான ஒரு படத்தை இன்னொரு லேடி டைரக்டரான கீது மோகன்தாஸ் யஷ்ஷை வைத்து செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்;
படம் முழுக்க சண்டை போடுகிறாரோ இல்லையோ பெண்களுடன் உல்லாசத்தில் ஈடுபடுவதிலேயே முதல் பாதி முழுவதையும் முடித்து விடுகிறார் யஷ். படத்தில் 3 மணி நேரம் படுக்கையறை காட்சிகளுக்காக 4 ஆண்டுகளாக 5 ஹீரோயின்களுடன் யஷ் எத்தனை முறை எத்தனை டேக் எடுத்து ஜாலி பண்ணாரோ என ரசிகர்கள் படம் பார்க்கும் போதே கலாய்த்து வருகின்றனர்.
கதையாக பார்த்தாலே பழைய பட பாணியில் அந்த காலத்துக்கு கதை செல்கிறது. அதிலும் யஷ் மற்றும் நயன்தாரா இருவருமே அனாதைகள், பிணத்தில் இருந்து நகைகளை எடுத்தால் தான் சாப்பாடு என கொடுமைப்படுத்தப் படுகின்றனர். தம்பியின் பசியை தீர்க்க அக்கா நயன்தாரா சிறு வயதிலேயே பலான தொழிலுக்குச் செல்வது போன்ற காட்சிகள் படத்திற்கு பலமாக அமையும் என இயக்குநர் கீது மோகன்தாஸ் எப்படி நினைத்தார் என்றே தெரியவில்லை.
ஆனால், அந்த காட்சிகள் எல்லாம் படத்துக்கான எமோஷனலை சரியான அளவில் கொடுக்காத விதத்தில் படத்தில் நாயகிகளான தாரா சுதாரியா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் மற்றும் ஏகப்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும், புகைப்பிடிக்கும் மாஸ் காட்சிகளும், லிட்டர் கணக்கில் சரக்குகளை பெரிய பெரிய பாட்டில்களை குடித்து விட்டு தள்ளாடும் காட்சிகளும் அடிக்கடி வந்து இம்சை செய்வதால் படத்தின் கதையை சரியாக ரசிக்க முடியாத நிலை உருவாகிறது.
தனது மகனையே மலையில் இருந்து காரில் அடைத்து தள்ளி விடும் காட்சியில் வரும் அழுத்தத்தை அப்படியே கடத்தாமல் அடுத்த காட்சியே அவர் சென்று காப்பாற்றுவது போன்ற காட்சிகளும், கிளைமேக்ஸில் சொல்லப்படும் விஷயமும் அந்த காட்சியின் ஆழத்தையும் அழுத்தத்தையும் தெளிவில்லாமல் ஆக்குவதால் டாக்ஸிக் படம் டார்ச்சராகவே மாறிவிடுகிறது.
யஷ் கொடுத்த வேலையை சரியாகவே பார்த்துள்ளார். ஆனால், இதெல்லாம் ரசிகர்களுக்கு சரியாக கனெக்ட் ஆகும் என அவர் எப்படி நம்பினார்? எந்த கேள்வியையும் இயக்குநர் கீது மோகன்தாஸை கேட்கவில்லையா? என்கிற கேள்விகள் படம் பார்க்கும் போதே எழுகிறது.
யஷ் 2 வேடங்களில் அசத்தலாக நடித்தாலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கியாரா அத்வானி காட்சிகள் ரொம்பவே பிளாஸ்டிக்காக உள்ளதால் படத்தின் முக்கிய இடமே அடிவாங்குகிறது. நயன்தாரா, ஹூமா குரேஷி சிறப்பான பர்ஃபார்மன்ஸை கொடுத்தாலும் தாரா சுதாரியா, ருக்மணி வசந்துக்கு பெரிதாக வேலை இல்லை.
காதலா? அரிப்பா? என வரும் வசனங்களை எல்லாம் யார் தான் எடுத்துக் கொடுத்தார் என்கிற கேள்விகளும் ரொம்பவே மோசமான கதை, திரைக்கதை, வசனம், டப்பிங்கை நம்பி இத்தனை கோடிகளை கேவிஎன் நிறுவனம் மற்றும் யஷ் எப்படி கொட்டினார்கள் என்றே தெரியவில்லை.
டாக்ஸிக்: டார்ச்சர்
ரேட்டிங்: 2/5.
