×

ரஜினியோடு படமா?.. எப்பா கிளப்பி விடாதீங்கய்யா?... மறுக்கும் இளம் இயக்குனர்......

 
ரஜினியோடு படமா?.. எப்பா கிளப்பி விடாதீங்கய்யா?... மறுக்கும் இளம் இயக்குனர்......

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. போன வருடம் துவங்கிய இந்த திரைப்படம் தற்போதுதான் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ரஜினி கலந்து கொள்ளும் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எனவே, அவர் சென்னை திரும்பவுள்ளார்.

இப்படத்திற்கு பின் ‘கண்ணும் கன்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்பட இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவியது. தேசிங் பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர். கண்னும் கண்னும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றபோது, ரஜினியின் பாராட்டுக்காக காத்திருக்கிறேன் எனக்கூறினார்.

அவர் கூறியது போலவே அப்படத்தை பார்த்த ரஜினி தேசிங் பெரியசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தினார். மேலும், வீட்டிற்கு நேரில் வரவழைத்து பேசிய ரஜினி ‘எனக்கு ஒரு கதை தயார் செய்யுங்கள்’ எனக் கூற, ஒரு ஒன்லைனை தேசிங் பெரியசாமி கூறினார். அந்த கதை ரஜினியின் மூளையில் ஓடிக்கொண்டிருப்பதால் கதையை டெவலப் செய்ய சொல்லி அவரிடம் ரஜினி கூறியிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அந்த தகவலை தேசிங் பெரியசாமி மறுத்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனது அடுத்த திரைப்படம் பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. விரைவில் தெரிவிக்கிறேன். என் மீது காட்டும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

தேசிங் பெரியசாமி சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.

நடப்பது நடக்கும்போதுதான் ரஜினியா? சிவகார்த்திகேயனா என்பது நமக்கு தெரியவரும்... 

From around the web

Trending Videos

Tamilnadu News