Categories: Cinema News latest news

ஆஸ்கர் நாயகனை திட்டாதீங்கப்பா!.. முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல இசையமைப்பாளர்!.. அமைதி காத்த திரையுலகம்!..

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி மறக்கவே முடியாத நிகழ்ச்சியாக மாறிய நிலையில், தானே பலியாடு ஆகிறேன் என நடந்த தவறுக்கு மற்றவர்களை குறை சொல்லாமல் இசைப்புயல் முன் வந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

திரைத்துறையில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படியொரு சம்பவே நடந்தது போல தெரியாமல் அப்படியே எந்தவொரு கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்து வரும் நிலையில், முதல் ஆளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பாரு பாரு.. பாப்பா வித்தை காட்டுது பாரு!.. பட வாய்ப்பு இல்லைன்னதும் பிக் பாஸ் பிரபலம் இப்படி ஆகிட்டாரே!..

30 ஆண்டுகளாக தமிழ் மக்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களையும் தனது இசையால் மகிழ்வித்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் நடந்த நிர்வாக குளறுபடி காரணமாக நடந்த தவறுக்கு ஏ.ஆர். ரஹ்மானை மட்டுமே ஒட்டுமொத்த பேரும் அவதூறாக பேசி வரும் நிலையில், அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவே இல்லாத சூழல் உருவாகி இருந்தது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் அத்தனை தவறுக்கும் தானே பொறுப்பு என மன்னிப்பு கோரியுள்ள நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக யுவன் சங்கர் ராஜா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சியான் விக்ரம் தான் பொன்னியின் செல்வன் 2 தோல்விக்கு காரணமா?.. ப்ளூ சட்டை மாறன் புது உருட்டு!..

இத்தனை பெரிய இசை கச்சேரிகள் நடக்கும் போது அதற்கான நிகழ்ச்சி நிர்வாகிகள் எந்தவொரு பிரச்சனையும் வராத அளவுக்கு எப்படி நிகழ்ச்சியை நடத்த வேண்டுமோ அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானால் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களை எப்படி மகிழ்விப்பது என்பது மட்டுமே நோக்கமாக இருக்கும். தேவையற்ற வேலைகளை அவர் செய்திருக்க வாய்ப்பே இல்லை. இது ஒரு பாடமாக நமக்கு அமைந்திருக்கிறது. வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M