வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அவரா?!.. என்ன ஆகப்போகுதோ பார்ப்போம்!...

 
வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அவரா?!.. என்ன ஆகப்போகுதோ பார்ப்போம்!...
தமிழ் சினிமாவில் சென்னை 28 திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் வெங்கட்பிரபு. இவரின் அப்பா கங்கை அமரன் பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என கலக்கியவர். கரகாட்டக்காரன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர். சென்னை 28 படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. வெங்கட்பிரபு எப்போதும் ஜாலியாக படம் எடுப்பார். அவரின் படத்தில் எப்போது மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ் என சிலர் தொடர்ந்து நடிப்பார்கள். அதேபோல், துவக்கம் முதல் இப்போதுவரை வெங்கட்பிரபுவின் படங்களுக்கு அவரின் தம்பி யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வருகிறார். இதையும் படிங்க: விஜயும் இல்ல.. அல்லு அர்ஜுனும் இல்லை!.. அந்த ஹீரோவை இயக்க போகும் அட்லி!.. இது செம டிவிஸ்ட்!.. இவர்கள் இருவரின் கூட்டணியில் சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது விஜயை வைத்து வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்திலும் யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வருகிறார். சில நாட்களுக்கு முன் ஒரு பாடலும் வெளியானது. ஆனால், அந்த பாடல் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ரசிகர்கள் தொடர்ந்து திட்டியதில் அப்செட் ஆன யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே மூடியதும் நடந்தது. எனவே, கோட் படத்தில் அவர் எந்த மாதிரியான இசையை கொடுத்திருக்கிறார் என்பது அப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் போதுதான் தெரியவரும். வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் படத்துக்கு இசை அவரா?!.. என்ன ஆகப்போகுதோ பார்ப்போம்!... கோட் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார் வெங்கட்பிரபு. வழக்கமாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத்தே இசையமைப்பார். அதைத்தான் சிவகார்த்திகேயனும் விரும்புவார். ஆனால், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைக்க போகிறாராம். இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு யுவன் இசையமைத்தது இல்லை. இதுதான் முதன் முறை. ஏற்கனவே கோட் படத்தில் பாடல் நன்றாக இல்லை என ரசிகர்கள் கோபப்பட்ட நிலையில் எஸ்.கே-வுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From Around the web