Categories: latest news

விஜய்க்காக இறங்கி வந்த லாரன்ஸ்! அடுத்து அரசியலிலும் ஆட்டம் காட்டுவார்களா? வைரலாகும் வீடியோ

Vijay Lawrence: சமீபகாலமாக விஜய் குறித்தே பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதுவும் அரசியல் வருகை அதனை அடுத்து சமீபத்தில் விஜய் கட்டிய சாய்பாபா கோயில். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாவது இந்த கோயில் கட்ட நேரம் எடுத்திருக்கும். ஆனால் இது விஜய் கட்டி வருகிறார் என யாருக்குமே இதுவரை தெரியவில்லை.

அவர் கோயிலில் இருக்கும் மாதிரியான புகைப்படம் வெளியானதில் இருந்துதான் இந்த செய்தி பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதுவும் அவர் துபாயில் இருக்கும் ஏதோ ஒரு சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தார்கள். அதனை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேக வீடியோ வெளியான பிறகுதான் இந்த நியூஸ் காட்டுத்தீ போல் பரவியது.

இதையும் படிங்க: பாக்கியாவை பார்த்து உருகும் பழனிசாமி… இப்போவே ரோமியோவா ஆகிட்டாரே!..

கொரட்டூரில் இருக்கும் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலப்பரப்பில் தாய் ஷோபாவிற்காக விஜய் இந்த சாய்பாபா கோயிலை கட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதை ஷோபாவே நேரடியாக பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் லாரன்ஸ் தீவிர சாய்பாபா பக்தர். அவரும் அம்பத்தூரில் ஒரு கோயில் கட்டியிருக்கிறார். கூடவே அவரின் அம்மா சிலையையும் அந்த கோயிலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு அடுத்த படியாக தன் அம்மாவுக்காக விஜய் இந்த கோயிலை கட்டியிருக்கிறார். இந்த நிலையில் இன்று விஜய் கட்டியிருக்கும் சாய்பாபா கோயிலுக்கு லாரன்ஸ் விசிட் அடித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது, அவரை வரவேற்க வாசலிலேயே விஜயின் தாய் ஷோபா காத்துக் கொண்டிருக்க லாரன்ஸ் ஷோபா காலை தொட்டு வணங்கி உள்ளே செல்கிறார்.

இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்ஜிஆருடன் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த கதாநாயகிகள்!… யார் யார்னு தெரியுமா?

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லாரன்ஸ் கண்டிப்பாக விஜயுடன் சேர்ந்து tvk கட்சியில் இணைய வாய்ப்பிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள்தான் சமீபத்தில் kpy பாலாவுடன் அவர் சேர்ந்து செய்யும் உதவிகள் என கூறிவருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/reel/C5sTgdjv-XH/?igsh=MWNwcnZydW1zMTF2aA==

Rohini

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

4 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

5 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

7 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

19 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

20 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago