உங்களுக்காக நடிப்பதையே நிறுத்திடுறேன்!. மைக் மோகனை உருகி காதலித்த நடிகை.. அட நிஜமாதாங்க!..

Published on: November 30, 2023
actor mohan
---Advertisement---

Mohan: தமிழ் சினிமாவில் மைக் மோகன் என அழைக்கப்படுபவர் நடிகர் மோகன். இவர் மூடுபனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி அங்கீகாரத்தையே உருவாக்கினார்.

இவரின் நடிப்பு அந்த காலத்தில் அனைத்து மக்களாலும் ரசிக்கப்பட்டது. ராதா, நதியா, ராதிகா போன்ற பல முன்னணி நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மெளன ராகம், மெல்லா திறந்தது கதவு, பாடு நிலாவே போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் வாசிங்க:சரோஜாதேவி எடுத்த தவறான முடிவு!.. மொத்தமா மார்க்கெட் போனதுதான் மிச்சம்!…

மேலும் சினிமாவில் நடித்தால் கதாநாயகனாகதான் நடிப்பேன் என முடிவில் இருந்த மோகன் தற்போது விஜய்யின் தளபதி68 திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கதாநாயனாக மட்டுமே நடித்து கொண்டிருந்த மோகன் தற்போது வில்லன் அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி பிரபல திரைப்பட விமர்சகரும், யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். அதாவது 80களில் முன்னணியில் இருந்த இரண்டெழுத்து நடிகை ஒருவர் மோகனை மிகவும் காதலித்ததாக கூறியிருந்தார்.

இதையும் வாசிங்க:கதறி அழுத உதவியாளர்… அதை பார்த்து சிரிச்ச எம்.ஜி.ஆர்!.. என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?…

மேலும் தொடர்ந்து மோகனிடம் தனது காதலை கூறிய அந்த நடிகை மோகனுக்காக தனது சினிமாவை கூட விடத்துணிந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மோகனை வற்புறுத்தியதாகவும் ஆனால் மோகனுக்கு அவர் மேல் எந்த காதலும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அந்த நடிகைக்கு தற்போது திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறியிருந்தார்.

அவர் கூறியதை வைத்து பார்க்கும்போது அவர் சொன்ன நடிகை ராதாவாக இருக்கலாம் என இணையதளவாசிகள் கருத்தினை தெரிவித்து வருகின்றனர்.  சிலரோ வேறு நடிகையாக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் வாசிங்க:இது என்னோட படமே இல்ல!… சூப்பர் ஹிட் படத்தை பற்றி எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.