எனக்கு எண்ட்டே இல்ல… லெஜண்ட் படத்தினை தொடர்ந்து அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சரவணன்…
பிரபல துணிக்கடையின் உரிமையாளரான சரவணன் முதலில் தன நிறுவன விளம்பரங்களில் சில ஆண்டுகள் முன்னர் நடிக்க தொடங்கினார். அதில் அவருக்கு வரவேற்பு கிடைக்க, அதை தொடர்ந்து சினிமாவிலும் கால் பதித்தார். அவரின் முதல் படமான லெஜண்ட் அறிவிப்பு வந்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும், அவரை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யவும் தொடங்கினர்.
உல்லாசம், விசில் படங்களின் இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இப்படத்தினை இயக்கினார்கள். ஊர்வசி ரவுத்தேலாவை மிகப்பெரிய தொகையை கொடுத்து நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தனர். கதையும் சரி லெஜெண்ட் சரவணனின் நடிப்பும் ஒரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸினையே பெற்றது.
இதையும் படிங்க: ‘பாசமலர்’ பட வெற்றிக்கு முக்கியமான காரணம்! சிவாஜியோ சாவித்ரியோ இல்ல – பிரபல இயக்குனர் சொன்ன சீக்ரெட்
லெஜெண்ட் படம் சமீபத்தில் தான் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகியது. இதை தொடர்ந்து அவர் இனி நடிக்க மாட்டார் எனவும், இப்படத்தால் அவர் நிறைய கடன்களில் இருக்கிறார் எனவும் பல யூகங்கள் கிளம்பியது. இந்நிலையில் அவர் இரண்டாம் படத்தின் அறிவிப்பை சரவணனே வெளியிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: இது சுதந்திர தின ஸ்பெஷல்!. மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 பட புதிய போஸ்டர்!…
அதற்கு பதிலளித்த சரவணன், இத்தனை நாள் நல்ல கதைக்காக தான் எதிர்பார்த்து காத்திருந்தேன். அது கிடைத்து விட்டது. விரைவில் அப்படத்தினை எடுத்து ரிலீஸ் செய்து விடலாம் எனச் சொல்லினார். இதனால் இரண்டாம் படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இனிமே கிட்ட வாங்கடா!.. ஜெட் வேகத்தில் ரஜினி!.. லோகேஷ் படத்துக்கு கால்ஷீட் ரெடி..