LEO Audio Launch: விஜயின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. லலித் தயாரிப்பில் அனிருத் இசையில் படம் நல்ல முறையில் வந்திருப்பதாக விஜய் தெரிவித்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில்தான் லியோ படத்தை முழுவதுமாக விஜய் பார்த்ததாக செய்திகள் வெளிவந்தது. அக்டோபர் 19 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது. முதல் வாரத்தில் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க: எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்… வேதனையில் புலம்பும் மார்க் ஆண்டனி நடிகர்…
அந்த இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்துதான் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திய பிறகு நடக்கும் இசை வெளியீட்டு விழா என்பதால் விழாவில் எந்தமாதிரியான ஒரு பேச்சை பேசுவார் என்று காத்திருக்கிறார்கள்.
அதே சமயம் நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பதால் ஒரு 6000 பேர் மட்டும் பங்குக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வழக்கம் போல் பத்திரிக்கை அன்பர்களுக்கு அனுமதி இல்லையாம். ஆனால் இந்த விழாவை வேறு மேடையாக மாற்ற விஜய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: பாத்ரூம் ரெண்டு பேருக்கும்! பூவே உனக்காக சீரியலில் இருந்து விலக காரணமே இதுதான் – அசீம் குறித்து பிரீத்தி சொன்ன தகவல்
அதாவது தமிழ் நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தலா 20 பேர் என டிக்கெட் விற்பனைசெய்யப் போகிறார்களாம். அதே சமயம் விஜய் மக்கள் இயக்கத்தில் வெவ்வேறு அணிகள் இருக்கின்றனர். அந்த அணிகளில் இருந்து குறிப்பிட்ட சில பேருக்கு அனுமதி கொடுக்கப்பட இருக்கிறதாம்.
இதிலேயே 5000 பேர் வந்து விட்டனர். மீதமுள்ள 1000 பேர்தான் லியோ படத்தில் நடித்த கலைஞர்கள் என கூறுகிறார்கள். ஆகவே இது ஒரு பெரிய மாநாடு போல் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். இப்படி மக்கள் இயக்கம் சார்பாக அழைத்து வந்த ரசிகர்களுக்கு விஜய் ஏமாற்றம் கொடுக்காமல் இருந்தால் சரி என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் கல்யாணம் பண்ணாலும் ஏன் டைவர்ஸ் நடக்குது?.. மாநகரம் ஸ்ரீ வாழ்க்கையில இப்படியொரு சோகமா?..
ஏனெனில் வருபவர்கள் எல்லாருமே விஜய் அரசியல் குறித்து பேசுவார் என்ற நம்பிக்கையில் தான் வருவார்கள். ஆனால் விழாவை நடத்தப் போறது சன் டிவி. அவர்கள் இருக்கும் போது எப்படி விஜய் அரசியல் பேச முடியும்? அதனால் இவ்ளோ பெரிய கூட்டத்தை கூட்டி விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…