Cinema News
ஜெய்லர் வசூலை தொடக்கூட முடியாது… லியோ படக்குழுவை கதறவிடும் புது பிரச்னைகள்! ஐயகோ!
Leo: லியோ படத்தின் ரிலீஸ் வேலைகள் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தினை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் சென்சார் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மற்ற படங்களை போல இல்லாமல் இப்படத்திற்கு வெல்ல வேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக உருவாகி இருக்கிறது லியோ. விஜய் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என பல வில்லன்களை களமிறங்க இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கலாநிதி மாறன் கொடுத்த கவரில் இருந்தது இத்தனை கோடியா!.. அடேங்கப்பா தலையே சுத்துது!…
அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள லியோ திரைப்படத்தின் முன் வியாபாரமே 450 கோடியை எட்டி இருக்கிறது. கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்தின் வசூல் 800 கோடியை நெருங்கி இருக்கும் நிலையில் அதன் வசூலை முறியடிக்க படக்குழு பல வழிகளில் யோசித்து வருகின்றனர்.
ஜெய்லர் படத்துக்கு அதிகாலை காட்சியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் லியோ படத்துக்கு அந்த அனுமதி கொடுக்கப்படும் பட்சத்தில் வசூல் இன்னமும் அதிகரிக்கும். இதனால் ரசிகர்கள் தொடர்ந்து அதிகாலை காட்சி வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அதற்காக எந்த முடிவும் எட்டபடாமலே இருக்கிறது.
இதையும் படிங்க: மஞ்சள் வீரன் டைரக்டர் லெவலுக்கு இறங்கிய அட்லீ… தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு!
இந்நிலையில் அதிகாலை காட்சியை லியோ படத்துக்கு போடாமல் போனால் வசூல் 40 சதவீதம் வரை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் போட்டியில் ஜெய்லரே முந்தி நிற்கும் என்கின்றனர் திரை விமர்சகர்கள். சன் பிக்சர்ஸுக்கே கொடுக்காத அதிகாலை காட்சி லியோவுக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லியோ தமிழ் சென்சார் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் வெளிநாடுகள் அன்கட் வெர்சனாக வெளியிடுவோம். இப்படைப்பை அப்படி பார்த்தால் தான் சரியாக இருக்கும் என தொடர்ச்சியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.