Cinema News
3 நாட்களில் 300 கோடியை நெருங்கியதா லியோ?.. சனிக்கிழமை வசுல் மட்டும் இத்தனை கோடியா?..
லியோ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய் எப்படி வசூல் செய்தது அதுவே டவுட் என அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரும் நம்ப முடியாது என புலம்பி வருகின்றனர்.
அதே சமயம் வலிமை பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இல்லாமல் அது தான் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் என இப்போதும் எப்படி உருட்டுறீங்க என விஜய் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்படியே உனக்கு வேணும்னா வேற இடம் இருக்கு! சிவகார்த்திகேயனை கிழித்தெடுக்கும் பிரபலம்
ரசிகர்கள் சண்டை ஒரு பக்கம் இருக்க பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் லியோ படத்துக்கு வெள்ளிக்கிழமையான 2வது நாள் பலத்த அடி விழத்தான் செய்துள்ளது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்கவே தயாரிப்பு நிறுவனம் ரிப்போர்ட்டை வெளியிடவில்லை என்கின்றனர்.
ஆனால், சனிக்கிழமையான நேற்று மீண்டும் லியோ படத்தின் வசூல் உலகளவில் 90 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாளில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 148.5 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் நாள் உலகளவில் 70 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லியோவால் நொந்து நூடுல்ஸான லலித் குமார்!.. முதல் நாளில் அப்படி வசூல் செய்தும் முகத்துல சந்தோஷமே இல்லையே?..
மேலும், மூன்றாம் நாளான நேற்று 90 கோடி ரூபாய் வசூலை லியோ எட்டியிருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமையான இன்று மீண்டும் 100 கோடியை லியோ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் படி பார்த்தால் இதுவரை 3 நாட்களில் லியோ திரைப்படம் உலகளவில் 308 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கக்கூடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. முதல் 3 நாட்களிலேயே இதுவரை விஜய் படங்கள் வாழ்நாள் முழுவதும் செய்த சாதனையை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் முறியடித்து இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில், ஜெயிலர் வசூலை முதல் வாரத்திலேயே முந்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.