More
Categories: Cinema News latest news

கோயிந்தா கோயிந்தா!.. லியோ படம் நல்லா வசூல் ஆகணும் கோயிந்தா.. லோகேஷ் எங்கே இருக்காரு பாருங்க!..

லியோ படத்தின் வசூல் குறித்து எல்லாம் தனக்கு கவலை இல்லை என லோகேஷ் கனகராஜ் பல கோடிகளை சம்பளமாக வாங்கிக் கொண்டு சொன்னாலும், லியோ படத்தின் வெற்றிக்காக திருப்பதி கோயிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க மலையேறி சென்றுள்ள வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் விஜய் அட்மின் மற்றும் லியோ படத்தின் துணை தயாரிப்பாளர் ஜெகதிஷ் ப்ளிஸ் என ஒட்டுமொத்த லியோ பாய்ஸ் கேங்கும் கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரைக்கும் படிகளில் இரவு முழுக்க ஏறி செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Advertising
Advertising

இதையும் படிங்க: விட்டா மொத்தத்தையும் காட்டிடுவாங்க போல!.. தளபதி 68 பட ஹீரோயின் எவ்ளோ அம்சமா இருக்காரு பாருங்க!..

பொதுவாகவே பிரபலங்கள் திருப்பதிக்கு சென்றால் வாகனம் மூலமாக மேல் திருப்பதிக்கு டைரக்டாக சென்று பெருமாளை தரிசித்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்கிற வேண்டுதலுடன் கீழ் திருப்பதி முதல் மேல் திருப்பதி வரை நடந்து சென்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோயிந்தா கோஷம் போட்டுக் கொண்டு லோகேஷ் கனகராஜ் உடன் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதே கேக் ஊட்டுற சீன்!.. இதுவும் ஜெயிலர் காப்பியா.. லோகேஷ் கனகராஜுக்குள்ள இருந்து என்ன ப்ரோ அட்லீ வராரு!..

மேலும், மேல் திருப்பதிக்கு சென்ற நிலையில், அங்கே வேட்டி சட்டை, அணிந்துக் கொண்டு செம சூப்பராக சாமி தரிசனம் செய்ய ரெடியாகி உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக ஷாருக்கான் ஜவான் படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை நயன்தாராவுடன் திருப்பதிக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜவான் வசூலையும் சேர்த்து முடிக்கத்தான் இந்த திருப்பதி பயணமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/CyQ_xb8yMIw/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Published by
Saranya M

Recent Posts