Leo Feast: தமிழ் சினிமாவில் ரிலீஸுக்கு முன்னரே மிகப்பெரிய தொகையில் விற்பனையான திரைப்படம் என்றால் லியோதான். அந்த படத்தின் வசூலை அதிகரிக்க படக்குழு பல ஐடியாக்களை பிடித்து அதனை செயல்படுத்தி வருகின்றனர்.
லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படம் ரிலீசுக்கு நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் சென்சார் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என பலர் நடிக்க இருக்கின்றனர்.
இதையும் வாசிங்க:ரஜினியுடன் இணையும் ஸ்டைலீஸ் இயக்குனர்?!.. அப்போ வேற லெவல் சம்பவம்தான் போலயே!…
லியோ வரும் பூஜை தினத்தில் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மற்ற படங்களுக்கு இல்லாமல் லியோ திரைப்படத்தின் முன் வியாபாரமே 450 கோடியை எட்டி இருக்கிறது. கோலிவுட்டில் சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்தின் வசூலை முறியடிக்க படக்குழு பல வழிகளில் யோசித்து வருகின்றனர்.
இதில் முதற்கட்டமாக அதிகாலை காட்சிக்கு லியோ குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஜெய்லர் படத்துக்கு அதிகாலை காட்சியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அதனால் லியோவிற்கு அந்த வாய்ப்பு குறைவு தான். தற்போது படம் ரிலீஸாக இருக்கும் அடுத்த 30 நாட்களுக்கும் அப்டேட் என செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.
இதையும் வாசிங்க:ஏங்க இப்படியா அல்பமா இருப்பீங்க.. சேரன் மனைவியிடம் ப்ளீஸ் சொன்ன மிஷ்கின்… அப்பையும் ஏமாத்திட்டாரு!
அதன்படி இன்று சஞ்சய் தத்துடன் விஜய் சண்டையிடும் ஒரு அப்டேட் கீப் காம் அண்ட் ஃபேஸ் தி டெவில் என்ற ஹேஸ்டேக்குடன் வெளியாகி இருக்கிறது. இதேப்போல திரையரங்கு உரிமையாளர்களும் அடுத்த 30 நாட்களுக்கு விஜயின் டாப் ஹிட் படங்களை தினம் ஒரு ஷோ வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர்.
அந்த வகையில், சென்னை ரோகிணி தொடங்கிய இந்த ட்ரெண்ட்டினை தற்போது பல மாவட்ட திரையரங்குகள் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கோலிவுட்டில் மிகப்பெரிய வசூல் குவிக்கும் என நம்பப்படும் லியோ வசூலை குவிக்க பல வழிகளில் படக்குழு முயன்று வரும் நிலையில் தற்போது தங்களுக்கும் வசூல் அதிகரிக்க திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…