லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் லியோ. விக்ரம் எனும் மெகா ஹிட்டை கொடுத்ததால் லோகேஷ் இயக்கும் படங்களுக்கென்ற தனி எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதோடு, விஜயும் சேர்ந்தவிட எக்கச்சக்க ஏதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் வெளியானது. அதேநேரம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.. இரண்டாம் பாதி போர்.. லோகேஷ் படம் போலவே இல்லை என பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. எனவே, இப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாது என்றே எல்லோரும் நினைத்தனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!
ஆனால், நடந்ததோ வேறு. பொதுவாக விஜய் படங்கள் ஓரளவுக்கு வசூலை பெற்றுவிடும். இதில், லோகேஷ் கனகாரஜும் இணைந்ததால் நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் ‘ஒரு தடவ படத்தை பார்ப்போம்’ என்கிற மனநிலை பலருக்கும் இருந்தது. எனவே, வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சத்தமே இல்லாமல் லியோ சில சாதனைகளை செய்து முடித்துள்ளது. தமிழ் திரையுலகில் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளருக்கு கொடுத்தது போக தயாரிப்பாளருக்கான பங்கு ரூ.100 கோடி வந்தது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ரூ.90 கோடி இருந்ததாக சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: த்ரிஷா பேசும் போது மனப்பாடம் செய்தாரா விஜய்?.. வெற்றி விழாவை மரண ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!..
லியோ படம் தமிழகத்தில் மட்டும் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக வசூலை பெற்ற தமிழ் படமாகவும் லியோ இருக்கிறது. ஹிந்தியிலும் அதிக வசூலை பெற்ற 2வது தமிழ்படமாக லியோ இருக்கிறது. அதேபோல் வெளிநாட்டிலும் லியோ படம் அதிக வசூலை பெற்று சாதனை படைத்துவிட்டது.
மொத்தத்தில், லியோ படம் மூலம் விஜய் தான் ஒரு பாக்ஸ் ஆபிஸ் கிங் என காட்டிவிட்டார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு விஜய்க்கு ரூ.200 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் விஜய் பாக்குற ஒரே பேஜ் இதுதானாம்! குசும்புக்கார தளபதியா இருக்காரே
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…