இத்தன பேர நடிக்க வச்சும் ஒருத்தரும் வரலயே!. இது என்னடா லியோ புரமோஷனுக்கு வந்த சோதனை!..

Published on: October 15, 2023
leo
---Advertisement---

Leo movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம்தான் இப்போது சினிமா உலகில் டாக் ஆப்த டவுனாக இருக்கிறது. இந்த படம் வருகிற 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் முன்பதிவு 2 நாளைக்கு முன்பே துவங்கிவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் துவங்கப்படவில்லை. தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே வருமானத்தை பங்கு பிரிப்பதில் முடிவு எட்டப்படவில்லை. எனவே, இழுபறி நீடித்து வருகிறது. பொதுவாக ஒரு படம் ரிலீஸாவதற்கு 10 நாளைக்கு முன்பே படக்குழுவினர் புரமோஷன் வேலையை துவங்கிவிடுவார்கள்.

இதையும் படிங்க: மிஸ்ஸான லியோ!.. மொத்த படத்தையும் வாங்கி குவிக்கும் ரெட் ஜெயன்ட்.. புதுசா சிக்கியது எது தெரியுமா?..

அதாவது இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் ஊர் ஊராக சென்று பத்திரிக்கையாளர்களை சந்திப்பார்கள். ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள். ஆனால், லியோவுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜய் அவர் நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுவார். அதுதான் அவர் செய்யும் பெரிய புரமோஷன். ஆனால், இந்த முறை அதுவும் நடக்கவில்லை.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டும் எல்லா யுடியூப் சேனல்களுக்கும் சென்று பேட்டி கொடுத்து வருகிறார். ஒரு நாளைக்கு 4 சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இந்த படத்தில் ஒரு குட்டி கோடம்பாக்கமே நடித்துள்ளார். ஆனாலும், யாரும் புரமோஷனுக்கு வரவில்லை. இந்த படத்தில் நடித்துள்ள திரிஷா விடாமுயற்சி படத்திற்காக வெளிநாட்டில் இருக்கிறார்.

இதையும் படிங்க: லியோ கதை புதுசுன்னு நான் சொல்லவே இல்லையே!.. போட்டு தாக்கும் லோகேஷ் கனகராஜ்..

அர்ஜூன் அவரின் புதிய படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். பிரியா ஆனந்தும் பிஸியாக இருக்கிறார். மன்சூர் அலிகானையும், மிஷ்கினையும் பேச வைத்தால் ஏழரையை இழுத்துவிடுவார்கள். விஜய் எந்த ஊடகத்திற்கும் வரமாட்டார். எனவே, லோகேஷ் கனகராஜ் தன்னந்தனியாக புரமோஷன் வேலையை செய்ய துவங்கிவிட்டார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கே அப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் அப்படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் புரமோஷனுக்கு வரும்போது லியோ போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு லோகேஷை தவிர யாரும் புரமோஷனுக்கு வரவில்லை. ஒருவேளை இந்த படத்திற்கு புரமோஷனே தேவையில்லை என நினைத்துவிட்டார்கள் போல!…

இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ‘லியோ’ பத்தியே பேசுறீங்களே! சத்தமில்லாமல் ரோலக்ஸ் செய்ற காரியத்தை பார்த்தீங்களா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.