ஜெய்லர் செய்த மாஸ் வசூல்… தட்டி தூக்க லியோ படக்குழு வைத்த சூப்பர் செக்! நல்லா இருக்கே!
Lokesh Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படத்தின் வசூலை அதிகரிக்க படக்குழு அதிக அளவில் ஐடியாக்களை யோசித்து வரும் நிலையில் தற்போது ஒரு புதிய உத்தியை கையில் எடுத்திருக்கின்றனர். அதன்படி பார்த்தால் படத்தின் வசூல் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த மாஸ் படமாக லியோவை மாற்ற பரபரப்பாக இயங்கி வருகிறார். விஜயும், பீஸ்ட் தோல்வி, பெரிய அளவில் பேசப்படாத வாரிசு படத்தின் சோகங்களை லியோ படத்தில் சரி செய்ய வேண்டும் என தீர்க்கமாக இருக்கிறார். இதனால் படத்தின் கடைசிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: லியோ பாட்டுக்கே வேட்டு வச்ச சென்சார்… அப்போ படத்துக்கு? அதிர்ச்சியில் படக்குழு!
அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத், த்ரிஷா, பிக்பாஸ் ஜனனி, ப்ரியா ஆனந்த் என ஒரு மினி கோலிவுட்டையே லியோ படத்தில் இறக்குகிறார் லோகேஷ். இதுவே படத்தின் வியாபாரத்தினையும் எகிற வைத்து இருக்கிறது. இப்போது வரை பிசினஸ் 500 கோடியை நெருங்கி இருக்கிறது.
இதற்கிடையில் ஜெய்லர் படத்துக்கு சரியாக போட்டி இல்லாத காரணத்தால் படத்தின் வசூல் 700 கோடியை தாண்டிவிட்டது. இதனால் அப்படத்தின் வசூலை லியோ முறியடிக்கவும் வேண்டும். ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. விரைவில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.
இதையும் படிங்க: ஜவானில் ஷாருக்கான் செஞ்ச ஒரே தப்பு!.. செஞ்சிவிட்ட விஜய் சேதுபதி!.. எல்லாம் அட்லிய சொல்லணும்!..
மேலும் வசூலை அதிகரிக்க அதிகாலை 4 மணி காட்சியை போட உத்தரவிட வேண்டும் என படக்குழு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் இல்லாமல் தியேட்டர் உரிமையாளர்களும் இந்த காட்சி போடப்பட்டால் இன்னும் பெரிய கோடிகள் வசூல் கிடைக்கும் எனவும் கேட்டு இருக்கின்றனர். அரசு தரப்பு என்ன பதில் சொல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.