Connect with us
jawaan movie

Cinema News

ஜவானில் ஷாருக்கான் செஞ்ச ஒரே தப்பு!.. செஞ்சிவிட்ட விஜய் சேதுபதி!.. எல்லாம் அட்லிய சொல்லணும்!..

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக பணிபுரிந்து பின் தனது சொந்த முயற்சியினால் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார். இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

பின் கார்த்தி நடிப்பில் வெளியான நான்  மகான் அல்ல திரைப்படத்தில் துணை கதாபாத்திரைத்தில் நடித்திருந்தார். பீட்சா என்ற திரில்லர் படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூது கவ்வும் போன்ற திரைப்படங்களின் மூலம் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: கடைசி வரை கம்பி நீட்டிய விஜய்!.. நயன்தாராவை நம்பி வீணாப்போச்சே!.. அடிவாங்கிய ஜவான் வசூல்!..

சில காலம் இவரின் படங்கள் பெரிதளவில் ஓடாததால் பின் தனது பாதையை மாற்றி கொண்டார். கதாநாயகான நடிப்பதை நிறுத்தி கொண்டு வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். கதாநாயகனை விடவும் வில்லன் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாகவும் இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இவரின் எதிர்மறையான நடிப்பினால் தமிழ் சினிமாவில் வில்லனாக பிரபலமானார். தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம்தான் ஜவான்.

இதையும் படிங்க: பிச்சை எடுக்கிறாரு ரஹ்மான்!.. சரியான ஃபிராடு.. டிக்கெட்டுகளை கிழித்து அசிங்கமா திட்டும் ரசிகர்கள்!..

இப்படத்தில் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

ஷாருக்கான் பாலிவுட்டின் மிக பெரிய பிரபலம். இவருடன் நடிப்பதால் விஜய் சேதுபதியும் மிக பெரிய அளவில் வளர்ச்சியடைவார். விஜய் சேதுபதியின் வருங்கால வளர்ச்சிக்கு இப்படம் ஒரு அடித்தளமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் ஷாருக்கான் போன்ற பல ஆண்டுகள் அனுபவமுள்ள முன்னணி கதாநாயகனுக்கு அவர் தரத்தில் உள்ள மாஸ் நடிகரை வில்லனாக நடிக்க வைத்திருந்தால் இப்படம் இன்னமும் பல மடங்கு வெற்றி பெற்றிருக்கலாம் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: ஓவர் நைட்ல ஒபாமா!. படம் ஓட பல கோடி செலவு பண்ண பவர்ஸ்டார்!. அட கொடுமையே!…

google news
Continue Reading

More in Cinema News

To Top