Categories: Cinema News latest news

இதுக்காச்சும் இது நடந்துச்சே..! மூச்சு விட்ட லியோ படக்குழு..! இனி ஆட்டம் அதிரடியா இருக்கும்..

Leo movie: விஜய் நடிப்பில் ரிலீஸாகி இருக்கும் லியோ படத்துக்கு கடைசியாக ஒரு பாசிட்டிவ் விஷயம் நடந்து இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். இது படக்குழுவுக்குமே சந்தோஷமான விஷயம் தான் என கிசுகிசுக்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நட்சத்திர கூட்டமே எக்கசக்கமாக இருந்தது. த்ரிஷா, பிரியா ஆனந்த, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி என லிஸ்ட் நீண்டு கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து இருந்தார்.

இதையும் வாசிங்க:இசைஞானி கூட அத செய்யலையே!.. முதல் படத்திலேயே தரமான சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு தொடர்ச்சியாக பல பிரச்னைகள் எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பெரிய ப்ரோமோஷன் எதுவுமே நடத்தப்படவில்லை.

இதில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் தலையீடு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சிலர் லியோ குழு முறையாக முன் அனுமதி வாங்காமல் விட்டதாலே போலீசார் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்ததாக கூறப்பட்டது. 

இதையும் வாசிங்க:புருஷன் பிக்பாஸ் வீட்டில் கண்ணீரில் ரச்சிதா… வைரலாகும் இன்ஸ்டா பதிவு..! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..!

அந்த நேரத்தில் தான் ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இருந்த எக்கசக்க கெடுப்பிடிக்களுக்கு இடையே இந்த படத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் படம் ரிலீஸாகி 10 நாட்களை கடந்து இருக்கிறது.

அதிகாரப்பூர்வ 7 நாள் வசூலே 450 கோடிக்கும் மேல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதனையடுத்து வெற்றி விழாவை பெரிதாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதாம். தற்போது அதற்கு முதல் வேலையாக போலீசாரிடம் முன் அனுமதியை பெற்றுவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Published by
Akhilan