More
Read more!
Categories: Cinema News latest news

முதல் அடியே மரண பயத்தை காட்டிட்டாங்க பரமா.!. ஜெயிலரின் அந்த சாதனையை காலி செய்த லியோ..!

Jailer: லியோ படத்தின் ரிலீஸ் நெருங்கி இருக்கும் நிலையில் அப்படத்தின் ஒரு விஷயம் ரஜினிகாந்தின் ஜெய்லர் சாதனையை முறியடித்து இருக்கிறது. அதுவே ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கை கொடுத்து இருக்கிறதாம். முதல் அடியே ஹெவியா இருப்பதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லோகேஷ் இயக்கத்தில் லியோ இசை வெளியீட்டு விழா திடீரென ரத்தாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் மீது விஜய் ரசிகர்கள் கோபத்தினை காட்டினர். முதலில் வெளிநாடு பின்னர் தமிழ்நாடு என ஆட்டம் காட்டினீர்களே, கடைசி நேரத்தில் இப்படி ஏமாத்திட்டீங்களே என திட்டினர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..

அவர்களை கூல் செய்யும் பொருட்டு நேற்று இரண்டாவது சிங்கிள் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் வரியில் பெரும்புள்ளிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி எழுதி கொடல் உருவுற சம்பவம் உறுதி. இதுவரையில் நல்லவன் இருந்தான். இந்த கதையில ராட்சசன் முகம்தான். பல ராஜாக்கள பார்த்தாச்சுடா இவன் கத்தி ரொம்ப கூறாச்சுடா. நூறு பஞ்சாயத்த தீர்த்தாச்சு டா என்ற பாடல் வரிகள் இடம் பெற்று இருந்தது.

இதனால் ஆடியோ ரிலீஸில் கொடுக்க இருந்த பதிலடியை பாடலின் மூலம் கொடுத்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இது ரஜினிக்கு கொடுத்த பதிலடியா? இல்லை ஆளும் அரசுக்கு எதிராக கொடுக்கப்பட்ட பதிலா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: கேண்டீனை விட்டு வெளியேறிய பாக்கியா… குஷியில் ராதிகா- கோபி… கடுப்பில் ஈஸ்வரி..!

இந்நிலையில் இப்பாடல் 16 மணிநேரத்திற்குள் 10 மில்லியன் வியூஸை பெற்று இருக்கிறது. ஆனால் ஜெயிலர் படத்தின் பாடல் 24 மணி நேரத்துக்குள் 6.4 மில்லியன் வியூஸ் தான் பெற்று இருந்தது. இதனால் முதல் சாதனையை பாடல் வியூஸில் ஹிட் அடித்துள்ளது லியோ.

இதுவே விஜய் ரசிகர்களுக்கு முதல் ஹிட்டாக இது இருப்பதாகவும், இந்த சாதனை தொடர்ச்சியாக நடக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி தீர்க்கின்றனர். தற்போது யூட்யூப்பில் பேட்டாஸ் பாடல் ட்ரெண்ட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan

Recent Posts