என்னவேணுனாலும் சொல்லுங்கப்பா! இதுல நான்தான் கிங் - ரஜினியை விட மாஸ் காட்டிய விஜய்

rajini
Actor Vijay Mass: கோலிவுட்டில் சமீபகாலமாக விஜய் அஜித் என்ற போட்டி போய் விஜய் ரஜினி போட்டித்தான் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொன்னதில் இருந்து ரஜினி ரசிகர்கள் பொங்க ஆரம்பித்தனர்.
அதிலிருந்தே இரு ரசிகர்களும் மாறி மாறி சமூக வலைதளங்களில் வார்த்தைகளை எக்குத்தப்பாக பேசி சண்டையிட்டு வந்தனர். இதை மேலும் உசுப்பேத்தும் விதமாக ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா கழுகு கதை அமைந்தது.
இதையும் படிங்க: நாடகம் to சினிமா.. கம்பீரமான குரல்.. கவரும் நடிப்பு… மறக்க முடியாத மேஜர் சுந்தர்ராஜன்…
இப்படி தீராத பிரச்சினையாக இவர்களுக்குள் ஒரு தீப்பொறி எரிந்து கொண்டே இருக்கின்றது. ஜெயிலர் பட வசூலை லியோ நிச்சயமாக முந்தும். அதுமட்டுமில்லாமல் 1000 கோடி வசூலை பெறும் என்றெல்லாம் பேசிக் கொண்டு வந்தனர்.
ஆனால் ஜெயிலர் பட வசூலை லியோ திரைப்படத்தால் முந்த முடியவில்லை.இரு படங்களின் வசூல் வித்தியாசம் 30 கோடி அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் லியோ மற்றும் ஜெயிலர் திரைப்படத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் என்ற அடிப்படையில் ஜெயிலர் திரைப்படத்தைல் லியோ திரைப்படம் முந்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…
பிரபல IMDB நிறுவனம் இந்த வருடம் வெளியான படங்களில் மிகவும் பாப்புலாரிட்டி வாய்ந்த படங்களின் லிஸ்டை வெளியிட்டிருக்கிறது. அதில் லியோ திரைப்படம் 4வது இடத்தையும் ஜெயிலர் திரைப்படம் 6வது இடத்தையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.