Categories: Cinema News latest news

இணையத்தில் கசிந்த லியோ படத்தின் கதை? அப்போ சஞ்சய் தத்துக்கும் விஜய்க்கும் இந்த உறவு தானா?

Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. பலரும் டிக்கெட் வாங்க முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.

சினிமா டிக்கெட் விற்கும் எல்லா தளத்திலும் அடுத்த 5 தினத்துக்கான எல்லா டிக்கெட்டுமே விற்பனை ஆகி விட்டது. பாண்டிச்சேரியில் 7 மணி காட்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதால் அங்கு படத்தின் டிக்கெட் விற்பனை அதிகரித்து இருக்கிறது. 

Also Read

இதையும் படிங்க: ஒன்னு கேட்டா ஒன்னு ஃப்ரீ! இமான் சிவகார்த்திகேயன் இடையே இதுதான் நடந்தது – டபுள் டிரீட் வைத்த பயில்வான்

அதே வேளையில் கேரளாவிலும் லியோ படத்துக்கு மவுசு அதிகமாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் 4 மணி காட்சிக்கு ஏன் தயாரிப்பு நிறுவனம் இத்தனை மெனக்கெடல் எடுக்கின்றனர். அதனால் ப்ளாக் டிக்கெட் விற்பனை தான் அதிகரிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்து விட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் கதை குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. விஜயின் தந்தை தான் சஞ்சய் தத். அவர் மிகப்பெரிய போதை பொருட்கள் விற்பனை செய்து வருபவர். அதனால் விஜய் அவரை விட்டு பிரிந்து வந்து விடுகிறார்.

சஞ்சய் தத்துக்கே ஒரு கட்டத்தில் எதிரியாகி விட விஜயை போட்டு தள்ள ஆட்களை அனுப்புகிறார் சஞ்சய். லியோ தாஸாக இருந்த விஜய் தன்னுடைய குடும்பத்துடன் காஷ்மீரில் பார்த்திபனாக வாழ்ந்து வருகிறார். ஹைனா சண்டையில் விஜய் அதை கொல்லவில்லை. 

இதையும் படிங்க: கமல் ஆசைக்காக ஹெச்.வினோத் செய்த செயல்… அடடே என்ன பாசமா? இல்ல அடுத்த பட வாய்ப்புக்கா?

விஜயின் சாக்லேட் ஃபேக்டரிக்கு ஹைனா தான் காவலாக இருக்குமாம். அப்போ ஹைனாவை கொல்ல யாரும் வரும் போது விஜய் அதை காப்பாற்ற செல்வாராம். எல்சியூவில் லியோ இருக்குமா என கேள்விகள் இருக்கிறது. அது குறித்து இன்னும் உறுதியாக தகவல்கள் வரவில்லை. ஆனால் இப்படத்தில் ராம்சரண் இருப்பார் என்ற தகவலும் இருப்பதாக பிரபல திரை விமர்சகர் செய்யாறு ரவி தெரிவித்து இருக்கிறார்.

Published by
Akhilan