Cinema News
மடோனாவே நினைக்காத வேலையை படத்தில் லாக் செய்த லோகேஷ்… கடைசியில் விஜய் செய்த செயல்..!
Leo movie: விஜய் நடிப்பில் ரிலீஸாக இருக்கும் லியோ படத்தில் அவரின் தங்கையாக நடித்த மடோனா செபஸ்டியன் தன்னுடைய கேரியரிலேயே இது ஒரு மிகப்பெரிய படம் எனவும் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் சிலவற்றையும் தெரிவித்து இருக்கிறார்.
ப்ரேமம் படத்தில் மூன்றாவது நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர் மடோனா செபஸ்டியன். அவர் அந்த ரெட் வெல்வெட் கேக் சாப்பிட்ட அழகுக்கே ரசிகர்கள் சொக்கி போகினார். தமிழில் கவன், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருக்கு கோலிவுட் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: ரஜினி அழைத்தும் கமல் அனுமதியில்லாமல் வர மறுத்த பிரபலம்! தலைவருக்கே தண்ணி காட்டியவர் யார் தெரியுமா?
ஆனால் லியோ படத்தில் விஜயின் ட்வின் தங்கையாக ஆச்சரிய எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அசரடித்தார். அதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், லோகேஷ் எனக்கு ஒரு ஒன்லைனை மட்டும் தான் சொன்னார். சென்னை வரும் வரை நான் பாவமான தங்கை ரோலாக இருக்கும் என்று தான் நினைத்தேன்.
சென்னையில் அவர் கதையை கேட்ட பிறகே இதை செய்யலாமா என எனக்கே ஆச்சரியமாக இருந்தது. சண்டை காட்சி குறித்தும் என்னிடம் கூறவில்லை. இரண்டு நாட்கள் ஷூட்டிங் போன பின்னர் தான் சண்டை காட்சி குறித்து கூறினார். செய்து விடலாம் என்று நம்பினேன் என்றார்.
இதையும் படிங்க: முதல் வாரம் மொக்கை.. இரண்டாவது வாரமே சூப்பர் ஹிட்டான அஜித் படம்..! இயக்குனரின் நிலையோ பரிதாபம்..!
மேலும், என் அம்மாவை தவிர இந்த விஷயத்தினை வேறு யாரிடமும் கூறவில்லை. நா ரெடி பாடல் ஷூட்டிங்கில் தான் அதிகமான டான்ஸர் இருந்தார்கள். அப்போது ரொம்ப கஷ்டமாக எப்படி மறைப்பது என யோசித்தோம்.
லியோ ரிலீஸாக ரெண்டு வாரம் இருக்கும் போது மீடியாவில் இந்த விஷயம் வெளியான போது என்னிடம் கேட்டார்கள். ஆமாம் ஆனால் படம் ரிலீஸ் வரை யாரிடமும் சொல்லாதீங்க எனக் கூறிவிட்டேன் என்றார். மேலும் விஜய் ஷூட்டிங்கில் அமைதியாக இருப்பார். ஆனால் ஆக்ஷன் சொல்லிவிட்டால் அவர் நடிப்பு வேறு மாதிரி இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.