லியோ 9 மணி காட்சியும் இல்லையா?!.. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. பாவம் விஜய் ஃபேன்ஸ்!..

Actor vijay : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகியுள்ள லியோ படம்தான் சினிமா உலகிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏற்படுத்திய விளைவுகள்தான்.
ஒரு ஆங்கில படம் போல டிரெய்லர் இருந்தாலும் ஒரு காட்சியில் விஜய் பேசும் வசனமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் அமைப்புகளும், பெண் பிரபலங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் படக்குழு அமைதி காத்து வருகிறது.
இதையும் படிங்க: லியோவுக்கு முன்னாடியே கல்லா கட்டுவாரா திரிஷா?.. தி ரோட் திரைப்படத்தின் விமர்சனம் இதோ!..
பொதுவாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியானால் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியை போட்டு, ஒரு டிக்கெட்டின் விலை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்று கல்லா கட்டுவார்கள். ஆனால், லியோ படத்திற்கு அந்த சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
இதுவே விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஆனாலும், 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது 9 மணி காட்சிக்கும் அரசு அனுமதி கொடுக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முதல் காட்சி 10 மணிக்குதான் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஷூட்டிங்கில் சண்டை போட்ட லோகேஷ், விஜய்…? என்ன நடந்தது..? ஓபனாக உடைத்த லலித்குமார்..!
அதுவரை விஜய் ரசிகர்கள் பொறுக்கமாட்டார்கள் என்பதாலும், அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று கல்லா கட்டுவதற்காகவும் அக்டோபர் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சியை நடத்த இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் திட்டமிட்டுள்ளார். எனவே, இதற்கான டிக்கெட்டுகள் திரையரங்கில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே லியோ ஆடியோ லான்ச் நடைபெறவில்லை, இப்போது 9 மணி காட்சிக்கும் அனுமதி இல்லை என்பதால் விஜய் ரசிகர்கள் பலரும் அப்செட் ஆகியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜவானுக்கே 10 தானாம்.. ஆனா லியோவுக்கு 30 ஆ? ஜெய்லர் வசூல் எல்லாம் ஜுஜுப்பி… ஆட்டம் பயங்கரமால இருக்கு…!