ஜவானுக்கே 10 தானாம்.. ஆனா லியோவுக்கு 30 ஆ? ஜெய்லர் வசூல் எல்லாம் ஜுஜுப்பி… ஆட்டம் பயங்கரமால இருக்கு…!

by Akhilan |
ஜவானுக்கே 10 தானாம்.. ஆனா லியோவுக்கு 30 ஆ? ஜெய்லர் வசூல் எல்லாம் ஜுஜுப்பி… ஆட்டம் பயங்கரமால இருக்கு…!
X

Leo Movie: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் லியோ. கிட்டத்தட்ட இந்த படம் தமிழ் சினிமாவையே புரட்டி போடும் என யோசிக்கும் அளவுக்கு படத்தின் முன்வியாபாரமே 500 கோடியை தாண்டி இருக்கிறது.

இப்படத்தின் ரிலீஸின் வசூல் 1000 கோடியை தாண்ட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. லியோ படத்தின் வசூல் 1000 கோடியை நெருங்கினால் கண்டிப்பாக அதுவே முதல் தமிழ் படம் என்ற அந்தஸ்த்தினை பெறும். ஆனால் படத்தின் ப்ரோமோஷன் இதுவரை பெரிய அளவில் நடக்கவில்லை.

இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் ஒதுங்கிய அஜித் ஃபேன்ஸ்! ஒரே நாளில் லியோ படத்தின் சாதனை… தெறிக்க..!

இதையடுத்து, ஒரே நாளில் சென்சார் போர்டு ரிசல்ட், த்ரிஷா போஸ்டர், ட்ரைலர் என பெரிய விருந்தினையே வைத்தனர். இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் சில நாட்களில் துபாயில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதில் லோகேஷ் மற்றும் அனிருத் கலந்து கொள்வார் என தெரிகிறது.

மேலும் படத்தின் வசூல் அதிகரிக்க லியோ படக்குழு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். லியோ திரைப்படம் உலகம் முழுவதில் இருந்தும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தியேட்டர்களிலும் வெளியாகும் என தயாரிப்பாளர் லலித் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மரண பயத்தை காட்டிட்டான் பரமா! மீசை எடுக்கிறேனு சொன்னது தப்புதான் – டிரெய்லருக்கே இப்படியா?

பிரம்மாண்ட ஹிட் கொடுத்த கே.ஜி.எஃப் மற்றும் ஆர் ஆர் ஆர் படங்கள் மொத்தமாக 10 ஆயிரம் தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆனது. அதேப்போல 1000 கோடி வசூல் செய்த ஜவான் திரைப்படமும் 10 ஆயிரம் தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆனது. மேலும் லியோ படம் தான் பங்களாதேஷில் வெளியாக இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுலோவாக்கியாவில் ரிலீஸாக இருக்கும் முதல் இந்திய படம் என்பதும் லியோ தானாம்.

Next Story