பட்ஜெட்டோ பல கோடி!.. பக்கா ஸ்கெட்ச்!. பேன் இண்டியா போஸ்டர்!.. கல்லா கட்டுமா லியோ!..

vijay
Leo: விஜய் பட ரிலீஸ் என்றாலே அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். திருவிழாக்களில் என் படம் வெளியாவதை விட என் படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் சொன்னார். விஜயின் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
மாஸ்டர் படத்திற்கு பின் விஜயுடன் லோகேஷ் கனகராஜ் மீண்டும் கை கோர்த்துள்ளார். விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்திருப்பதாலும், லோகேஷ் இயக்கும் படங்களை அவரின் ரசிகர்கள் LCU என பேச துவங்கிவிட்டனர். ஏனெனில் திரையுலகில் ரசிகர்கள் பார்க்காத உலகை அவர் காட்டுகிறார்.
இதையும் படிங்க: அவர பாக்குறதே கஷ்டம்! பாத்துட்டா? டான்ஸ் கத்துக்க வந்த அஜித்தை பற்றி கலா மாஸ்டர் கூறிய சூப்பரான தகவல்
எனவே, லியோ படத்திற்கு ரசிகர்களிடம் தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது, இரண்டாவது சிங்கிள், இசை வெளியீட்டு விழா என விஜய் ரசிகர்கள் உற்சாகமாகி வருகிறார்கள். வருகிற 30ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
ஒருபக்கம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் புதிய புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. துவக்கம் முதலே லியோ படத்தை ஒரு பேன் இண்டியா படமாகமோ படக்குழு புரமோட் செய்து வருகிறது. பல மொழிகளிலும் போஸ்டர் வெளியாவதும் அந்த சூட்சமத்தில்தான்.
இதையும் படிங்க: லியோ ஆடியோ ரிலீஸில் இவங்களுக்கு அழைப்பு கிடையாது… ஏ.ஆர்.ரஹ்மானால் விஜயிற்கு வந்த சிக்கல்…
அதற்கு காரணம் இருக்கிறது. லியோ படம் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. எனவே, தமிழகத்தில் மட்டும் இப்படம் வசூல் செய்தால் அது லாபமாக அமையாது. ஜெயிலர் படத்தை போல கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றால் மட்டுமே தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதுதான் கணக்கு.
ஏற்கனவே ஜெயிலர் படம் மூலம் விஜய்க்கு பயம் காட்டிவிட்டார் ரஜினி. எனவே, அந்த வசூலை முந்த வேண்டும் என விஜய் ஆசைப்படுகிறார். ஆனால், அது நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. ஏற்கனவே கேரளாவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதேபோல், ஹிந்தியிலும் இப்படம் வெளியாகாது என சொல்லப்படுகிறது.
லியோ படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்குமா?.. ஜெயிலர் வசூலை முந்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: லியோ படத்தில் நடந்த கொடுமை!.. கதறும் நடன நடிகர்கள்!… இதெல்லாம் நியாயமே இல்ல!..