லியோ படத்தின் முழுக்கதையும் லீக்!. அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்!. எவன் பார்த்த வேலைடா இது?!..

by சிவா |
leo
X

Leo movie: தமிழ் சினிமாவில் இப்போது முக்கிய இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக நுழைந்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை அதிர வைத்தார். அதன்பின் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். இப்படி ஒரு திரைக்கதையை தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

கைதி படமும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்க சினிமா உலகினரால் லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்பட்டார். இதையடுத்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த படமும் ஹிட் அடிக்கவே அடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி உச்சத்திற்கு போனார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் கத்தினது வீண் போகல!.. அட விஜயே தேதியோட சொல்லிட்டாரே!.. வெளியாகும் லியோ டிரெய்லர்…

தற்போது மீண்டும் விஜயை வைத்து லோகேஷ் இயக்கியுள்ள திரைப்படம்தான் லியோ. லோகேஷின் முந்தைய படங்களை போலவே லியோ படமும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளது. அக்டோபர் 19ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் இந்த படத்திற்கு என்ன விதமான பிரச்சனைகள் வருமோ என கலக்கத்திலேயே படக்குழு இருக்கிறது.

முதலில் இப்படத்திற்கு அதிகாலை காட்சியை வெளியிட இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. 11 மணிக்குதான் முதல் காட்சி வெளியாகும் என சொல்லப்பட்டது. அடுத்து, இப்படத்தின் ஆடியோ லான்ச் சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. இதுவும் விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பிரியங்கா மோகனுக்கு பதிலா அந்த நடிகையா?!.. உனக்கு மனசாட்சி இருக்கா தல!.. தளபதி 68 பரபர அப்டேட்..

ஒருபக்கம் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே மனக்கசப்பு எனவும், விஜய்க்கும், அனிருத்துக்கும் இடையே மனக்கசப்பு எனவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிலுமே உண்மையில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் ஸ்னாப்சிஸ் என சொல்லப்படும் படத்தின் காட்சிகளை கொண்ட விபரங்கள் திடீரென சமூவலைத்தளங்களில் வெளியானது. அதில், விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகிய மூவரும் அண்ணன் - தம்பிகள், விஜய் அவர்களிடமிருந்து விலகி காஷ்மீரில் ஒரு காபி ஷாப் வைத்திருக்கிறார். அங்கு மனைவி திரிஷாவுடன் வாழும் அவரை தேடி அர்ஜூன் மற்றும் சஞ்சய் தத் குரூப் வர மீது என்ன நடக்கிறது என எல்லா விபரங்களும் அதில் இருந்தது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

Next Story